பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குப் பொதுத்துறை வங்கிகள் உருவாகி வரும் வாராக் கடன் பெரும் சுமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க ஏற்கனவே வங்கிகள் மறுசீரமைக்கப்பட்டு இணைக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து தற்போது வங்கிகளைத் தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.
வங்கி தனியார்மயமாக்கல்-ஐ எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அமைப்பு இணைந்து 16 மற்றும் 17ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் அமைப்பு
வங்கி ஊழியர்கள் அமைப்பின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் சேவைகளும் பாதிக்கப்பட உள்ளது. மேலும் வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிடக் கோரி பொதுத்துறை வங்கிகள் வங்கி ஊழியர்கள் அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
UFBU அமைப்பு
மத்திய அரசின் வங்கி தனியார்மயமாக்கல் திட்டத்தை எதிர்த்து United Forum of Bank Unions (UFBU) டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த UFBU அமைப்பின் கீழ் பல பிரந்திய மற்றும் வங்கி அமைப்புகளும் உள்ளது.
பொதுத்துறை வங்கி
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் போது பொருளாதாரத்தின் முக்கியத் தூண் பாதிக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து துறையிலும் பணப்புழக்கம் பாதிக்கப்படும், குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என AIBOC அமைப்பின் தலைவர் சஞ்சய் தாஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ நிர்வாகம் ட்வீட்
திங்கட்கிழமை எஸ்பிஐ உட்பட அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் ஊழியர்கள் அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் பேச்சுவார்த்தைக்கும் அழைத்துள்ளன. இதோடு எஸ்பிஐ நிர்வாகம் தனது ஊழியர்களின் முடிவை மாற்றிக்கொள்ள கோரி ட்வீட் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications