பிடிஆர்-க்கு 2 புதிய துறைகள் கொடுத்தது சரியா..? தரமான முடிவு.. ஏன்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் நிதிநிலை மேம்பட்டதில் முக்கியப் பங்கு வகித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு இன்று தமிழக அரசு அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு அரசின் வருவாய் அதிகரிப்பதில் சிறப்பான பணிகளைச் செய்தது மட்டும் அல்லாமல் நிதி நிர்வாகத்திலும், செயல்திறன் கண்காணிப்பிலும் பல மாற்றங்களை அடித்தளத்தில் கொண்டு வந்தது மூலம் துறை வாரியாகச் செயல்திறனைக் கண்டறிந்து தேவையான பிரிவுகளுக்கு மேம்பட்ட முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகம்.

இந்நிலையில் கூடுதலான பொறுப்புகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது பாராட்டப்படுகிறது.

திராவிட மாடல் என்றால் என்ன..? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் டக்கரான பதில்..!திராவிட மாடல் என்றால் என்ன..? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் டக்கரான பதில்..!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு முன்பு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பதவியில் நிதி, திட்டமிடல், மனிதவள மேலாண்மை ஆகியவை இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலன், புள்ளியியல் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டேட்டா டிரவென் முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என அனைவருக்கும் தெரியும்.

டேட்டா டிரவென் முடிவுகள்

டேட்டா டிரவென் முடிவுகள்

அதாவது எந்த ஒரு முடிவையும் தோராயமாக எடுக்காமல் போதுமான தீர்வுகளைத் திரட்டி அதன் மூலம் தேவையான முடிவுகளை எடுப்பது தான் டேட்டா டிரவென் முடிவுகள், இத்தகை முடிவுகள் பொதுவாகவே பெரிய அளவிலான பலன் அளிக்கும். குறிப்பாக நிதித்துறையில் இத்தகைய தரவுகள் பெரிய அளவில் பலன் அளிக்கும் என்பதால் பிடிஆர்-க்கு மிகவும் பிடித்தமான புள்ளியியல் துறை வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

பென்ஷன்

பென்ஷன்

இதேபோல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலன் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிலையில் பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி

புள்ளியியல் துறையை இதற்கு முன்பு ஐ.பெரியசாமி அவர்கள் நிர்வாகம் செய்து வந்த நிலையில் தற்போது பிடிஆர்-யிடம் வந்துள்ளது.இதற்கு முன்பு .தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த ஐடி விங் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமைச்சரவை மாற்றம்

இன்றைய அமைச்சரவை மாற்றம்

இன்று உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, திட்ட செயல்படுத்தல் துறை, வறுமை தணிப்புத் திட்டம் மற்றும் கிராமப்புறம் கடன்பட்டமை துறைகள் வழங்கப்பட்டு அமைச்சராக முதல் முறை பதவியேற்றார்.

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை

இதேபோல் அமைச்சர் பெரியகருப்பனுக்குக் கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது, வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்குச் சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்குக் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி-க்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக ஒதுக்கீடு செய்யப்பட்டது,

சுற்றுச்சூழல் துறை

சுற்றுச்சூழல் துறை

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன்-க்கு சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நகர்ப்புற மேம்பாட்டுத்துறை

நகர்ப்புற மேம்பாட்டுத்துறை

மேலும் அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது, அமைச்சர் எஸ்.முத்துசாமிக்குக் கூடுதலாக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் ஆர்.காந்திக்குக் கூடுதலாகப் பூதான் மற்றும் கிராம்தான் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிகரக் கடன்

தமிழ்நாடு அரசின் நிகரக் கடன்

நவம்பர் மாதம் ஆர்பிஐ வெளியிட்ட தரவுகள் படி தமிழ்நாடு அரசின் நிகரக் கடன் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 30.3 சதவீதம் வரையில் சரிந்து 24,403 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 35000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

CAG தரவுகள்

CAG தரவுகள்

மேலும் CAG அமைப்பின் தரவுகள் படி தமிழ்நாட்டின் மொத்த வருவாய் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ptr palanivel thiagarajan gets Pensions and Pensionary benefits and Statistics as additional portfolio

Tamilnadu Finance minister ptr palanivel Thiagarajan gets Pensions and Pensionary benefits and Statistics as an additional portfolio in today's Tamil Nadu cabinet reshuffle
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X