பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும் வேளையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் அதிகப்படியான தொழிற்சாலைகளை அமைக்கப்படும் வேளையில், பட்டதாரிகளை இப்புதிய தொழில்நுட்பத்திற்குத் தயாராகும் வண்ணம் பல முயற்சிகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறைக்குத் தேவையான திறமைகளை உருவாக்குவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதேவேளையில் தமிழ்நாட்டில் ஐடி சேவைத் துறையில் அடுத்தடுத்து பல பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியமான பணியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார்.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பலரும் எதிர்க்கும் வேளையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பாராட்டிப் பேசினார்.
இதோடு படித்தவர்களின் சதவீதம் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு உள்ளது.
சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது பட்டதாரிகள் ஏராளமாக உள்ளனர், ஆனால் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து ஐடி பார்க் அமைக்கப்படும் வேளையில் மாநிலம் முழுவதும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது இருந்த நிதி நெருக்கடி பிரச்சனை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசால் அதிகப்படியான ஐடி பார்க்-களை அமைக்க முடியவில்லை எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இதோடு AI தொழில்நுட்பம் தேவைக்கேற்ப கம்ப்யூட்டிங் பவர்-ஐ வழங்கும், ஒரு காலத்தில் கணினியை எவ்வாறு பயன்படுத்துவது என்று மக்களுக்குப் பயிற்சி அளித்தோம், இப்போது கணினி AI தொழில்நுட்பத்துடன் மனிதர்களைப் புரிந்துகொள்ளப் பயிற்சியளிக்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் மிகப்பெரிய திறனை தன்னுள் கொண்டு உள்ளது என்றும் பேசினார்.


Click it and Unblock the Notifications