புது வீடியோ கேம் விளையாட ரெடியா.. ஜப்பான் வீடியோ கேம் நிறுவனத்தை வாங்கிய PUBG கிரியேட்டர்

டோக்கியோ: சர்வதேச அளவில் வீடியோ கேம்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் adventure மற்றும் combat அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி தான் இந்தியாவிலும் PUBG விளையாட்டு மிக பிரபலமானது.

PUBG விளையாட்டை உருவாக்கிய உலக புகழ்பெற்ற நிறுவனம் தான் தென் கொரியாவின் கிராஃப்டான்(Krafton). இந்நிறுவனம் தற்போது ஜப்பானை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. கிராஃப்டான் நிறுவனம் திங்கட்கிழமை அன்று ஜப்பானின் டோக்கியோவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய டேங்கோ கேம் ஒர்க்ஸ் (Tango Gameworks)என்ற விளையாட்டு நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. எவ்வளவு தொகைக்கு இந்த நிறுவனத்தை வாங்கியது என்பது தொடர்பான தகவல்களை கிராஃப்டான் வெளியிடவில்லை .

புது வீடியோ கேம் விளையாட ரெடியா.. ஜப்பான் வீடியோ கேம் நிறுவனத்தை வாங்கிய PUBG கிரியேட்டர்

இந்த ஒப்பந்தத்தின் படி கிராஃப்டான் நிறுவனம் டேங்கோ கேம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான Hi-Fi RUSH உள்ளிட்ட கேம்களுக்கான உரிமங்களை பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. இதன் மூலம் கிராஃப்டான் நிறுவனம் சர்வதேச அளவில் கேமிங் துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முன்னணி இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டேங்கோ கேம் ஒர்க்ஸ் நிறுவனம் The Evil Within ,Ghostwire: Tokyo, Hi-Fi RUSH உள்ளிட்ட கேம்களுக்கு பிரபலமானது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அறிந்து கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு இதனை வாங்கியது. ஆனால் கடந்த மே மாதம் இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கைவிட்டது. இந்நிலையில் தான் கிராஃப்டான் நிறுவனம் டேங்கோ கேம் ஒர்க்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டில் டேங்கோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜெனி மேக்ஸ் மீடியாவை 7.5 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. இதன் மூலம் ஜப்பானை சேர்ந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுவது அதுவே முதல் முறையாக இருந்தது. ஆனால் திடீரென மைக்ரோசாப்ட் அதனை கைவிடவே கிராஃப்டான் நிறுவனம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கிராஃப்டான் நிறுவனம் இரண்டு கேம் டெவலப்பர்களுடன் கூட்டாண்மை கொண்டு புதிதாக கேம்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பர்களுக்கு 50,000 டாலர் முதல் நிதி உதவி வழங்குவதற்கும் கிராஃப்டான் நிறுவனம் தயாராக உள்ளது. தனித்துவமான வீடியோ கேமை உருவாக்கும் குழுவினருக்கு 2.5 லட்சம் டாலர்கள் வரை நிதியுதவி வழங்க தயாராக உள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+