நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் முதிர்வுக் காலம் இருக்கும். உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் அவசர கால நிதி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக சேமித்து வைப்பது அவசியம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) இது போன்ற பாதுகாப்பை வழங்குகிறது. தங்கள் சேமிப்பை முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டத்தில் மாதம் 1500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
PPF திட்டம் ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ்களில் அதிக வட்டி தரக்கூடிய திட்டங்களில் PPF திட்டமும் ஒன்று. PPF திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள். அதன் பிறகு மேலும் 5 ஆண்டுகள் விருப்பப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.500 முதல் செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரை தான் டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கை திறப்பதற்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு செல்லலாம்.

அதிக வட்டி விகிதங்களுக்கு கூடுதலாக PPF திட்டம் வரி சலுகைகளையும் வழங்குகிறது.15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 டெபாசிட் செய்வதன் மூலம் மொத்தம் 2,70,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்த வட்டி ரூ.2,18,185 ரூபாயாக இருக்கும். அப்படியானால் முதிர்வுக் காலத்தில் அதாவது 15 வருடங்களுக்குப் பிறகு 4,88,185 ரூபாயை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். இது தோராயமாக 5 லட்சமாக இருக்கும். இன்னும் அதிகமான வருமானம் தேடுபவர்கள் இந்த திட்டத்தினை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உங்களுடைய சேமிப்பை இன்னும் அதிகரிக்கலாம்.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் PPF கணக்குகளில் புதிய மாற்றம் வர உள்ளது. அதன்படி சிறுவர்கள் பெயரில் தொடங்கப்படும் ஒழுங்கற்ற கணக்குகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ? அதே வட்டி விகிதம் தான் பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு அந்த சிறுவர் 18 வயதை அடைந்தவுடன் PPF திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ அந்த வட்டி விகிதம் வழங்கப்படும்.
முதிர்வுக் காலம் எப்படி கணக்கிடப்படும்?: ஒரு குழந்தை 18 வயதை கடந்த பிறகு தான் முதிர்வு காலத்தின் எண்ணிக்கை தொடங்கும். மேஜரான தேதியிலிருந்து 15 ஆண்டுகள் வரை கணக்கை தொடர வேண்டும். அதேபோல ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட PPF கணக்கு இருந்தால் முதலீடாளர்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மை கணக்குகே PPF திட்டத்தின் வட்டி விகிதம் வழங்கப்படும். இரண்டாம் கணக்கில் உள்ள மொத்தத் தொகையும் சேர்த்து ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் இருந்தால் அவற்றை இணைத்து ஒரே வட்டியாக செலுத்தப்படும். ஆனால் அதை மீறும் பட்சத்தில் 2-வது கணக்கில் உள்ள தொகை வட்டி செலுத்தப்படாமல் திருப்பி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications