பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் எவ்வளவு ரொக்கம் வழங்கப்போகிறது என லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகை எவ்வளவு வழங்கப்படும் நேரடியாக ரேஷன் கடை வாயிலாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு எவ்வளவு ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கப் போகிறது, எந்த தேதியில் இருந்து இந்த பொங்கல் பரிசு பணம் கைகளுக்கு கிடைக்கப் போகிறது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார். அரசு தரப்பில் 3000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசுக்கான ரொக்க பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெறும் , இந்த பொங்கல் பரிசுக்கான ரொக்க பணம் எவ்வளவு , அது எப்படி மக்களுக்கு வழங்கப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.

புதுச்சேரி மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணத்தையும் வழங்குகிறது . 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி அரசு 4 கிலோ பச்சரிசி , நாட்டுச்சக்கரை , பாசிப்பருப்பு, 300 கிராம் நெய் மற்றும் ஒரு லிட்டர் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமாம் .
ஜனவரி 3ஆம் தேதி முதலே இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் புதுச்சேரி அரசு வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு தொகை வரவு வைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த இலவச ஆடை திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது . இதற்கு மாற்றாக ரேஷன் அட்டைதாரரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக பணம் செலுத்தப்பட்டு விடும்.
ஒரு நபர் மட்டுமே இருக்கக்கூடிய ரேஷன் அட்டைகளுக்கு 500 ரூபாயும் இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயும் பொங்கல் பணமாக வழங்கப்படுகிறது. பயனாளர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த பணம் வரவு வைக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications