புதுச்சேரி , கேரளா ஆகிய தமிழ்நாட்டின் இரண்டு அண்டை மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர நாம் தமிழர் கட்சி , தவெக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 294 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் கணம் காண்கிறார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் பதிவாகக் கூடிய வகையில் மே நான்காம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வெயில் அதிகமாக இருப்பதால் காலையிலேயே அதிகமானவர்கள் வாக்களிப்பார்கள் நண்பகல் சற்றே மந்தமடைந்து மாலையில் மீண்டும் அதிகமானவர்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தல் : திரளாக வந்து வாக்களிக்கும் மக்கள், திரை பிரபலங்கள்
புதுச்சேரி விஓசி அரசு பள்ளிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை நிலா என்ற ரோபோ வரவேற்பு அளித்து அனைவரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. வாக்காளர்கள் வாக்குச்சீட்டிலேயே வாக்குச்சாவடி விவரங்கள் இடம்பெற்றிருக்கும் எனவே நேரடியாக அங்கே சென்றுவிடுங்கள். வாக்குச்சீட்டு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் epic நம்பரை உள்ளிட்டு வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Voters' Services Portal-க்கு சென்று Search in Electoral Roll என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து epic நம்பரை உள்ளிட வேண்டும், இது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும். இதில் உங்களின் வாக்குச்சாவடி விவரங்கள் காட்டும். இந்த வாக்குச்சீட்டு விவரங்களுடன் வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கையில் கொண்டு செல்ல வேண்டும். அதிகாரிகள் உங்களின் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு ஆள்காட்டி விரலில் மை வைப்பார்கள். இதனை அடுத்து நீங்கள் வாக்களிக்கலாம்.
140 தொகுதிகளை கொண்ட கேரளாவிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இங்கு சுமார் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது இங்கே பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
இதற்கிடையே மூன்று மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் திரளாக வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஜனநாயக உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications