இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி 3 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் கிரிக்கெட் வெறியர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கும் 14வது ஐபிஎல் போட்டிகள் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி நடக்க உள்ளது.
ஐபிஎல் போட்டிகள்
கடந்த வருடத்தை விடவும் ஐபிஎல் போட்டிகளைச் சுற்றியுள்ள வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இந்த வருடம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், முன்னணி நிறுவனங்கள் எப்படியாவது ஐபிஎல் போட்டிகளில் தங்களது பிராண்டை விளம்பரம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகிறது.
பூமா நிறுவனம் கூட்டணி
இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் முன்னணி ஸ்போர்ட்ஸ்வியர் நிறுவனமான பூமா 14வது ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணியுடன் கிட் பார்ட்னர் ஆகக் கூட்டணி வைத்துள்ளது.
3 வருட ஒப்பந்தம்
இதற்காக ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணியுடன் ஜெர்மனி நாட்டின் பூமா நிறுவனம் சுமார் 3 வருடத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்த விலை குறித்து இருதரப்பும் எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் ஜெர்சி
இந்த ஒப்பந்தம் மூலம் பூமா நிறுவனம் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணியின் ஜெர்சியை அப்படியே தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய முடியும். ரீடைல் சந்தையில் மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் தளத்திலும் ஆர்சிபி அணியின் டிசர்ட்களை விற்பனை செய்யப் பூமா திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் பிராண்ட் பார்ட்னர்
பூமா நிறுவனம் ஐபிஎல் துவங்கியபோது பிராண்ட் பார்ட்னராக இருந்து, ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும், போட்டி அதிகமான காரணத்தாலும் ஐபிஎல் பிராண்ட் பார்ட்னரில் இருந்து விலகியது பூமா.
8 வருடத்திற்குப் பின்
சுமார் 8 வருட இடைவேளைக்குப் பின் பூமா தற்போது ஐபிஎல்-ல் டீம் பார்ட்னராகக் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் மற்றும் அதன் பிராண்ட் வேள்யூ கடந்த சில வருடமாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால் பூமா மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பிராண்டிங் செய்யத் துவங்கியுள்ளது.
ஸ்போர்ட்ஸ்வியர் நிறுவனம்
பூமா ஒரு ஜெர்மனி நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் சுமார் 135 நகரங்களில் 370 நேரடி விற்பனை கடைகளை வைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்போர்ட்ஸ்வியர் நிறுவனமாகவும் பூமா திகழ்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications