புனே: சிபிஐ அதிகாரி போல நடித்து புனேயில் வாகட் பகுதியைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் அந்த இன்ஜினியரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அந்த போலி அதிகாரி பணத்தை களவாடியுள்ளார். ஒரு டெலிகம்யூனிகேஷன் அப்ளிகேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு விடியோவை அனுப்பி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை பற்றி விசாரிப்பதாகக் கூறி இந்த மோசடியை அந்த சைபர் கிரிமினல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி அவரது மொபைல் போன் ஸ்கிரீனை ஷேர் செய்யச் சொல்லி, தனிப்பட்ட விவரங்களை கவர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளை செய்யச் சொல்லி அதன் மூலம் அவரது வங்கியின் ரகசிய விவரங்களைக் கைப்பற்றியுள்ளார். பின்னர் சட்டவிரோதமாக அவரது கணக்கில் இருந்து ரூ.40 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது.
இதுபற்றி பிம்ப்ரி சிந்ச்வாடு போலீஸ் நிலைய சைபர் கிரைம் பிரிவில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
என்ன நடந்தது?: பாதிக்கப்பட்டவருக்கு மார்ச் 21 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு விடியோ காலில் பேசுமாறு கூறியுள்ளார்.
அந்த அழைப்பில் போலி அதிகாரி, பாதிக்கப்பட்டவர் பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஒரு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கைதைத் தவிர்ப்பதற்காக ஒரு செக்யூரிட்டி டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் செல்போன் ஸ்கிரீனை தன்னுடன் ஷேர் செய்யுமாறு கூறியுள்ளார். அதன் மூலம் தான் சில பணப் பரிவர்த்தனைகளை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது செல்போன் ஸ்கிரீனை பாதிக்கப்பட்டவர் அந்த அதிகாரியிடம் ஷேர் செய்துள்ளார். இதை வைத்து பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கின் பின் நம்பர், ஓடிபி ஆகியவற்றை பெற்ற அந்த போலி அதிகாரி மோசடியாக ரூ.40 லட்சத்தை எடுத்துள்ளார்.
தனது வங்கியில் இருந்து மோசடியாக பணம் களவாடப்பட்டதைத் தெரிந்து கொண்ட பாதிக்கப்பட்டவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இதுபற்றி அவர்களும் விசாரித்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத இதுபோன்ற போன்கால்களை எடுக்க வேண்டாம் என்றும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தெரியாதவர்களிடம் தரக் கூடாது என்று எத்தனையோ முறை அறிவுறுத்தினாலும், இதுபோன்ற படித்தவர்களே ஏமாறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications