Business Ideas: தண்ணீர் பயன்படுத்தாமல் கார் வாஷ்.. வருடத்துக்கு ரூ.2.5 கோடி சம்பாதிக்கும் நிதின்..!

'தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம்' என்ற பழமொழி மகாராஷ்டிர மாநிலம் புனே-வைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் சர்மாவின் விஷயத்தில் நிரூபணமாகி உள்ளது. அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கார் வாஷ் பிஸினஸ் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக முடங்கிவிட்டது.

இருப்பினும் 40 வயதான நிதின் சர்மா இப்போது தினமும் 12 லட்சம் தண்ணீரை சேமிப்பதோடு கார் வாஷ் பிஸினஸ் மூலம் ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பாதிக்கிறார். இதற்கு காரணம் அவரது புதுமையான Go Waterless என்ற நிறுவனம்.

Business Ideas: தண்ணீர் பயன்படுத்தாமல் கார் வாஷ்.. வருடத்துக்கு ரூ.2.5 கோடி சம்பாதிக்கும் நிதின்..!

எம்பிஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட நிதின் தனது குடும்பத் தொழிலான கார் வாஷிங்கில் இறங்கினார். 2016இல் தொடங்கிய தண்ணீர் பிரச்சனை 2017 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. இதுபற்றி நிதின் கூறுகையில், 'ஒரு நாளைக்கு 50 கார்களை வாஷ் செய்வோம். இருந்த ஒரு போர்வெல் கிணறுதான் தண்ணீருக்கான ஆதாரமாக இருந்தது. ஆனால் 2017இல் கிணற்றில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இதனால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினோம். இந்தத் தொழிலுக்கு டேங்கர் லாரி தண்ணீர் எல்லாம் கட்டுப்படியாகவில்லை.

அப்போதுதான் தண்ணீர் பயன்படுத்தாத கார் வாஷ் மாடல் பற்றிய ஐடியா தோன்றியது. இந்த நிலையில் எனது உறவினர் ஒருவர் மூலம் அமெரிக்காவில் தண்ணீர் இல்லாமல் கார் வாஷிங் புராடக்ட் ஒன்று 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டேன்.
அதை வாங்கிப் பயன்படுத்தியபோது கார்களில் ஸ்க்ராட்ச்களும், பெயிண்ட் உரிந்து போவது தெரிந்தது. அந்த புராடக்டால் பிரயோஜனம் இல்லை என்று புரிந்துவிட்டதால் அதை விட்டுவிட்டேன்.

அந்த புராடக்டை இன்னும் ஆய்வு செய்து ஸ்க்ராட்ச்களை ஏற்படுத்தாத அளவுக்கு அதன் ஃபார்முலாவை மாற்ற முடியுமா என்று யோசிக்கத் தொடங்கினேன். 2017இல் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கார் பெயிண்ட் துறையைச் சேர்ந்த ஒரு டீமை உருவாக்கி புதிய ஃபார்முலாவை தயாரிக்க முயற்சி எடுத்தேன்.

இரண்டாண்டுகள் கழித்து அந்த டீம் சுற்றுச்சூழலை பாதிக்காத ஒரு திரவ நிலையிலான புராடக்டை உருவாக்கினர். ஐந்து வகையான செடிகளில் இருந்து இந்த புராடக்ட் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் கார் மெட்டல் மற்றும் பெயிண்டை பாதிக்காமல் கிளீனிங் செய்யலாம் என கண்டறிந்து கொண்டேன். மேலும் இந்த வாஷிங் முறையில் தண்ணீரை விட விரைவாகவும் ரொம்ப சுத்தமாகவும் செய்ய முடிந்தது.

இதுக்குறித்து நிதின் சர்மா கூறுகையில், நாங்கள் தயாரித்த திரவத்தை ஒரு ஸ்பிரேயர் மூலம் காரில் அடித்து சும்மா துணியை வைத்து துடைத்தாலே கார் பளிச்சென மாறியது. ரொம்பவும் அழுத்தமாகப் படிந்துள்ள அழுக்குகளைத் தவிர மற்ற கறைகளை ஈஸியாக துடைத்து விடலாம்' என்றார்.

தனது தயாரிப்பை உருவாக்குவதற்காக ஆராய்ச்சி, டெஸ்ட், டிரையல் ஆகியவற்றை செய்வதற்கு மட்டும் நிதின் தனது மற்றும் அவரது மனைவியின் சேமிப்பில் இருந்து ரூ.10 லட்சம் செலவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து Rewowlution Ventures Private Limited என்ற நிறுவனத்தை தொடங்கி Go Waterless என்ற பிராண்டை நிறுவினார்.
முதலில் 3 பேருக்கு பயிற்சி அளித்து 99 ரூபாய்க்கு ஒரு காரை வாஷிங் செய்யத் தொடங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மலிவு விலையில் இந்த வேலையைச் செய்தார் நிதின். இந்தப் புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிய விஷயம் என்பதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம் என்பது மற்றொரு காரணம்.

'கோ வாட்டர்லெஸ் வாஷிங்கினால் காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான பணத்தை நான் தந்துவிடுகிறேன் என்ற உறுதிமொழியை தந்தேன். அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த வாஷிங் முறை பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது' என்றார் நிதின்.

இப்போது ஒரு காரின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு ரூ.199-ம் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தை சேர்த்து சுத்தம் செய்வதற்கு ரூ.399-ம் கட்டணமாக நிதின் வசூலிக்கிறார். இதனிடையே கோ வாட்டர்லெஸ் ஃபிரான்சைஸ்கள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டன. முதல் பிரான்சைஸ் நாக்பூரில் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அதன்பின் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தில்லி உள்பட 22 மாநிலங்களில் இதுவரை 175 ஃபிரான்சைஸ்களை உருவாக்கியுள்ளார். இந்த பிரான்சைஸ்களில் தினசரி 8000 கார்கள் வாஷிங் செய்யப்படுகின்றன.

'ஒரு காரை வாஷிங் செய்ய குறைந்தபட்சம் 100 லிட்டர் தண்ணீர் தேவை அப்படிப்பார்த்தால் 8000 கார்களுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் கோ வாட்டர்லெஸ் மூலம் அந்த தண்ணீரை சேமித்தோம்' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் நிதின்.
ஒரு பிரான்சைஸ் தொடங்குவதற்கு அதன் உரிமையாளரிடமிருந்து ரூ.2 லட்சத்தை பிரான்சைஸ் கட்டணமாக நிதி வசூலித்தார். இப்போது அந்தக் கட்டணம் ரூ.5 லட்சம் ஆகிவிட்டது.

பிரான்சைஸை நடத்துவதற்குத் தேவையான கோ வாட்டர்லெஸ் கிளினீங் லிக்விட், அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி போன்றவற்றையும் நிதின் அளித்தார். கோ வாட்டர்லெஸ் கிளைகளில் மட்டுமல்லாமல் இப்போது ஒரு ஆப் மூலம் வீட்டுக்கே சென்று கார் வாஷிங் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் இந்த சேவை அறிமுகப்படுப்பட்டது.

இன்றைக்கு எங்களது கம்பெனியின் ஆண்டு வருமானம் ரூ.2.5 கோடி ஆகும். பிரான்சைஸ்களுக்கு ஒருமுறை கட்டணம்தான் வசூலிக்கின்றோம், வேறு எந்த ராயல்டியும் கேட்பதில்லை. பிரான்சைஸ்கள் மூலம் ரெகுலர் வருமானங்கள் எதுவும் இல்லை' என்று கூறும் நிதின் சர்மாவின் ஆசை என்னவென்றால் இந்தியாவில் தினசரி 3000 பில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க வேண்டும்.

அத்தோடு தண்ணீர் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும் என்பதுதான். விரைவில் கோ வாட்டர்லெஸ் திட்டத்தை 90 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நிதின் சர்மா.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+