புனே: 17 வயது சிறுவன் ஓட்டிய போர்ஷே கார், பைக் ஒன்றுடன் மோதி இரண்டு இளம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் உட்பட ஐந்து பேரை புனே காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மற்ற நான்கு பேர், மது அருந்தியதாகக் கூறப்படும் சிறுவனுக்கு மது வழங்கியதாகக் கூறப்படும் இரண்டு பப்கள் - Marriott Suites-ல் உள்ள BLAK மற்றும் Cosie - ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆவர்.

விஷால் அகர்வால் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஆவார். கட்டுமான துறையில் அகர்வால் குடும்பத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் கொள்ளு தாத்தா பிரம்மதத் அகர்வால் அவர்களால் பிரம்மா கார்ப் நிறுவப்பட்டது. இது இவர்களின் குடும்ப நிறுவனமாகும்.
1982 ஆம் ஆண்டில் ராம் குமார் அகர்வால் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் கூட்டு நிறுவனமாக நிறுவப்பட்டது, பின்னர் 2012 மார்ச் மாதத்தில் ஒரு தனியார் நிறுவனமாகவும், 2013 அக்டோபர் மாதத்தில் அதன் தற்போதைய பெயருடன் ஒரு பொது நிறுவனமாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
புனே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிக மற்றும் குடியிருப்பு திட்டங்களை கட்டுவதிலும், மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் புனேவில் எட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மேலும் மூன்று திட்டங்கள் வர இருக்கின்றன.
கிரிசில் குறிப்பில் வெளியான தகவல் படி, பிரம்மா கார்ப் மகாபலேஸ்வரில் உள்ள லெ மெரிடியன் மற்றும் புனேவில் உள்ள கிராண்ட் ஷெரட்டன் உட்பட இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் இயக்குகிறது.
புனே ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனத்தின் உறுதியான வர்த்தகம் மற்றும் திட்டங்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வது குறித்த சாதனை ஆகியவை சந்தையில் இந்நிறுவனத்திற்குச் சிறப்பான பிராண்ட் மதிப்பை உருவாக்கியுள்ளன.
பிரம்மா கார்ப், விஷால் அகர்வால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான நிறுவனத்திற்கு உரிமையாளராக இருக்கிறார். இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ள பிற முக்கிய வீடு கட்டுமான திட்டங்களில் புனேவின் வடகன் ஷெரி, Kharadi மற்றும் விமான நகர் பகுதிகள் ஆகியவை அடங்கும்.
புனேவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கட்டியுள்ள பிரம்மா மல்டிஸ்பேஸ் மற்றும் பிரம்மா மல்டிகான் போன்ற தொழில்களையும் இந்த குடும்பம் நடத்தி வருகிறது. ஆஜ் தக் அறிக்கையின்படி, விஷால் அகர்வால் வசமுள்ள பல்வேறு நிறுவனத்தின் மொத்த மதிப்பு 601 கோடி ரூபாயாகும்.
இந்தியாவின் முக்கிய ஐடி நகரங்களான புனே-வில் சனிக்கிழமை இரவு அதிவேகமாக வந்த போர்ஷே ஸ்போட்ஸ் கார் ஒன்று, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பைக்கில் இருந்த 2 இளம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
தூக்கி வீசப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய விலையுயர்ந்த போர்ஷே காரை ஓட்டியது புனே நகரை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் 17 வயது மகன் என்றும், இவர் மதுபோதையில் கார் ஓட்டியதும் தெரிய வந்துள்ளது.
17 வயது சிறுவன் மதுபோதையில் இருந்தது மட்டும் அல்லாமல், அவரிடம் வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ்-ம் இல்லை. கைது செய்யப்பட்ட 15 மணிநேரத்தில் பெயில் கிடைத்துள்ளது. மேலும் மைனர் சிறுவனுக்கு சில சிறிய அளவிலான தண்டனைகள் கொடுக்கப்பட்டும், கட்டுரை எழுதச் சொல்லியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் 2 உயிரைப் பறித்த சிறுவனுக்கு இதுதான் தண்டனையா என மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் வேளையில் இவருடைய தந்தை குறித்த விபரம் வைரலாகியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications