நாட்டின் 4ஆவது பெரிய சிமெண்ட் ஆலை நிறுவனம் டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட். இந்த சிமெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் புனித் யாது டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேறு யாருமல்ல. டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் யாது ஹரி டால்மியாவின் மகன் ஆவார்.
2023 டிசம்பர் 8 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் நீடிப்பார். நாட்டின் நான்காவது மிகப் பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான டால்மியா சிமெண்ட் லிமிடெட்டின் நிகர சொத்து மதிப்பு 2023 டிசம்பர் 5ஆம் தேதிப்படி ரூ.44,210 கோடியாகும்.
சிமெண்ட் உற்பத்தி மட்டுமல்லாமல் சர்க்கரை தயாரிப்பிலும் டால்மியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர்ப்ஸ் தகவல்படி அந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.26,670 கோடியாகும்.

டால்மியா பாரத் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புனீத் டால்மியா, கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்தே இந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்குப் பெரும் பங்கை ஆற்றி வருகிறார். டால்மியா பாரத் நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதற்கு முன்பாக புனித் கடந்த 1999ஆம் ஆண்டில் JobsAhead.com நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில் Monster.com நிறுவனத்திடம் இந்த நிறுவனம் விற்கப்பட்டது.
புனித் டால்மியா ஐஐடி-டெல்லியில் பி.டெக் படிப்பை முடித்தார். ஐஐஎம்-பெங்களூரில் எம்பிஏ படித்து தங்கப்பதக்கத்துடன் பாஸ் ஆனவர். தனது குடும்ப வணிகத்தை அவர் முறையான புரபஷனல் தொழிலாக மாற்றினார். 2017 ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனின் உற்பத்தி பிரிவுக்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சிமெண்ட் தொழிற்சாலை மேம்பாட்டு கவுன்சிலின் (Development Council for Cement Industry - DCCI) தலைவராக நியமிக்கப்பட்டார். 10 மாநிலங்களில் 15 சிமெண்ட் ஆலைகள் மற்றும் அரவை தொழிற்சாலைகளுடன் ஆண்டுக்கு 44.6 மெட்ரிக் டன் உற்பத்தியை டால்மியா செய்கிறது.
இந்திய அரசின் கலாசாரத்துறையுடன் இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டில் செங்கோடேடையை நினைவுச்சின்னம் மித்ராவாகத் தேர்ந்தெடுத்து டால்மியா ஏற்றுக் கொண்டது. அங்கு லேசர் ஷோவையும் நடத்துகிறது. இந்நிலையில் டால்மியா சிமெண்டுக்குத் தலைமை தாங்கும் புனித்தின் புத்திசாலித்தனமான வியூகங்களால் இந்த நிறுவனம் மிக விரைவில் நாட்டின் முதல் பெரிய உற்பத்தியாளராக விளங்கப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பொருளாதார நிபுணர்களும், அவரது தொழில்துறை நண்பர்களும் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications