சோயா பீன்ஸ் சாகுபடியில் புரட்சி செய்த விவசாயி..!

20 ஆண்டுகளுக்கு முன் விவசாயத் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பஞ்சாப் மாநிலம் சங்கூரூர் மாவட்டத்தில் உள்ள தே காலன் கிராமத்துக்கு சென்றனர். பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் ஜிஎஸ் கல்லாட், இந்தியாவில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் சென்றனர்.

அங்கு துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பச்சத்தர் சிங்-ன் கர்சா சோயா பீன் புராசஸிங் ஆலையில் பற்றி அறிந்து கொண்டனர். அந்தப் பகுதியில் பெரம்பாலும் கோதுமை மற்றும் அரிசி சாகுபடி நடக்கும் நேரத்தில் புதுமையான முறையில் சோயா பீன்ஸை பச்சத்தர் சிங் சாகுபடி செய்துள்ளார்.

சோயா பீன்ஸ் சாகுபடியில் புரட்சி செய்த விவசாயி..!


எனது வீட்டுக்கு வெளியே அதிகாரிகள் வந்திருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன் என்கிறார் 65 வயதான அந்த விவசாயி. தான் தயாரித்து வைத்திருந்த சோயா டோபு, சோயா பாலை அதிகாரிகளுக்கு பச்சத்தர் சிங் தந்தார். டாக்டர் சுவாமிநாதன் பன்னீரை சாப்பிட்டார் . அவருக்கு அது மிகவும் பிடித்து விட்டது. நான் அந்தப் பொருட்களை எங்கே விற்கிறேன் என்று கேட்டார். ஆனால் அவற்றை நான் இலவசமாக தருகிறேன் என்றதும் அந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டுவிட்டார் என்றார் சிங்.

அது அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் சோயா பொருட்களை யாருக்கும் இலவசமாகக் கொடுக்கவில்லை. பச்சத்தர் சிங் ஒரு ஆட்டோமேடிக் புராசஸிங் ஆலையை வைத்து சோயா பீன்ஸிலிருந்து பால் மற்றும் டோபு தயாரித்தார்.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக உதவியுடன் அவர் தனது பொருட்களை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பூத் வைத்து விற்கத் தொடங்கினார். அத்துடன் அவர் பிஸ்கெட், நம்கீன்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தயாரித்தார். தனது பொருட்களை விகர் சோய் ஹெல்த் மில்க் என்ற பெயரில் லூதியானா, சங்கூரூர், துரி, பர்னாலா, பதிண்டா, ராஜ்புரா மாவட்டங்களில் விற்று வருடத்துக்கு ரூ.48 லட்சம் சம்பாதித்தார்.

கடனில் இருந்த அந்த விவசாயி சிறந்த விவசாயிக்கான விருதை பெற்றார். சோயா பீன்ஸ் சாகுபடிக்கு முன்னதாக அவர் தனது நிலத்தில் ரோஜாக்களை சாகுபடி செய்தார். 90களின் கடைசியில் அவர் உருளைக்கிழங்கை விளைவித்து பெரும் லாபம் பெற்றார். இருந்தாலும் அவர் வியாபாரத்தில் ரூ.3 கோடியை இழந்தார். தொடர்ந்து அவரது விளைச்சல் மூன்று ஆண்டுகளாக குளிர்சாதன கிடங்கில் அடைந்து கிடந்தது.

1998 முதல் 2001 வரை என்னால் உருளைக்கிழங்கை விற்க முடியவில்லை. உற்பத்தி ஏராளமாக இருந்ததால் தேவை குறைந்திருந்தது. 2 ரூபாய்க்கு உப்பு வாங்கக் கூட என்னால் முடியவில்லை என்றார் சிங். பின்னர் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் அவர் மீண்டும் வியாபாரத்தை தொடங்கினார். அவரது கடனால் 15 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டியிருந்தது.

எனது நிலத்தை விற்றது மிகவும் கஷ்டமாக இருந்தது. எல்லா விவசாயிகளுக்கும் அவர்களது நிலம் தான் வாழ்க்கை. நான் மிகவும் மனம் நொந்து போயிருந்தேன். எந்த வீட்டு விசேஷங்களிலும் கலந்து கொள்ள முடியாமல் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அவற்றை தவிர்த்து வந்தேன் என்று வேதனையுடன் கூறினார்.

இதைத் தொடர்ந்து 1993இல் டெல்லியில் நடைபெற்ற ஒரு விற்பனை கண்காட்சியில் சோயாபீன் சாகுபடி பற்றியும் புராசஸிங் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் அவர் போபோலில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்லிகல்சுரல் இன்ஜினியரிங்கில் சோயா பால் மற்றும் சோயா பனீர் தயாரிப்பு பயிற்சியை முடித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் ஒரு சிறிய சோயா பால், சோயா டோபு தயாரிக்கும் பேக்டரியை நிறுவினார். தனது பலசரக்கு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதன் சாம்பிள்களை தந்தார். அவர்களுக்கு அது பிடித்திருந்தாலும் விலை கொடுத்து வாங்கவில்லை. இருந்தாலும் நான் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் என்று சிங் கூறினார். உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் தனது சோயா தயாரிப்புகளை சிங் விற்கத் தொடங்கினார்.

சங்கூரூரில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் கிருஷி விக்யான் கேந்திராவின் அசோசியேட் டைரக்டர் டாக்டர் மந்தீப் சிங் உதவியுடன் பச்சத்தர் சிங்குக்கு விற்பனை ஸ்டால்கள் அமைத்துத் தரப்பட்டன. அங்கு அவரது தயாரிப்புகளை விற்க உதவி செய்யப்பட்டது.

இப்போது பச்சத்தர் சிங் ஒரு ஆட்டோமேடிக் சோயாபீன் புராஸசிங் பிளான்ட்டை வைத்துள்ளார். அதில் தினமும் 700 லிட்டர் சோயா பாலும் 4 குவிண்டால் சோயா டோபும் தயாரிக்கின்றார். இதன் மூலம் அவர் வருடத்துக்கு ரூ.12 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கிறார்.
தனது மருமகள் கரண்வீருக்கும் தயாரிப்பில் பயிற்சி அளித்து ஆலையை அவரது பொறுப்பில் தந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சிங்குக்கு கரண்வீர் உதவுகிறார். அவர் எனக்கு புராசஸிங் வேலை மட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றியும் கற்றுத் தந்தார். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். எனக்கு பயிற்சி தந்தபோதும் அவரும் சேர்ந்து உழைக்கிறார் என்று கரண்வீர் கூறினார்.

2003இல் பச்சத்தர் சிங் மாநில விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றார். 2004இல் சௌத்ரி சரண் சிங் தேசிய விருதை பெற்றார். இந்திய சோயா பீன்ஸ் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் 2023இல் சோயா பானம் விருது வழங்கப்பட்டது. தான் இப்போது சம்பாதித்த பணத்தை விற்று முன்பு விற்ற 15 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டதாக பெருமையுடன் கூறுகிறார் சிங்.

Story Written by: jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+