அதானி குழுமத்தில் தொடர்ந்து பல அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகின்றது. கடந்த வாரம் ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையினை அடுத்து, அதன் வளர்ச்சியிலும் தாக்கம் இருக்கலாம் என கவலை எழுந்துள்ளது.
Recommended Video
இதற்கிடையில் அதானி குழுமமும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனமும் தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகின்றது.
அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களில் பெரும் சரிவைக் சந்தித்திருந்த நிலையில், அதில் செய்துள்ள முதலீடுகளின் நிலை என்ன என்பது குறித்து ஏற்கனவே எல்ஐசி விளக்கம் அளித்திருந்தது.
ரூ.7000 கோடி முதலீடு
தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதானி குழுமத்தில் கணிசமான தொகையினை முதலீடு செய்யவுள்ளது. அதானி குழுமத்தில் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த முதலீடுகள் குறித்து தற்போதைக்கு எந்த கவலையும் இல்லை என இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
ஹிண்டர்ன்பர்க்கின் எச்சரிக்கை
ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த வாரம் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தின் கடன் அளவுகள் மற்றும் வரி ஏய்ப்பு, மோசடியான பணபரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதேசமயம் அதானி குழுமம் அனைத்து உள்ளூர் சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், தேவையான ஒழுங்குமுறையினையும் சரியாக செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதானி ஏர்போர்ட் வணிகம்
அதானி குழுமத்தில் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2500 கோடி ரூபாயினை அதானி ஏர்போர்ட் வணிகத்தில் உள்ளது என பிஎன்பி-யின் தலைமை செயல் அதிகாரி அதுல் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஹிண்டர்ன்பர்க்கின் ஆய்வறிக்கையின் மத்தியில், வங்கி இதனை தொடர்ந்து கோயல் கண்கானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடகு வைத்து கடன் இல்லை
பங்குகளை அடகு வைத்து அதானி குழுமத்திற்கு வங்கி கடன் வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 44% அதிகரித்துள்ளது. இதன் வாரக்கடன்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளது.
மொத்தம் செயல்படாத சொத்து
கடன் அளிப்பவரின் சொத்து தரம் மேம்பட்டது. டிசம்பர் மாத இறுதியில் மொத்தம் செயல்படாத சொத்து விகிதம் 9.76% ஆக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 10.48% ஆக இருந்தது.
இதற்கிடையில் இவ்வங்கியின் நிகர வாராக்கடன் விகிதம் டிசம்பர் மாத இறுதியில் 3.30% ஆக இருந்தது.
வாரக்கடன் விகிதம்
மார்ச் மாத இறுதிக்குள் மொத்த வாரக்கடன் விகிதம் 9% ஆகவும், நிகர வாரக்கடன் விகிதம் 3% ஆகவும் வங்கி இலக்கினை கொண்டுள்ளது என கோயல் கூறியுள்ளார். 2022 - 23ம் ஆண்டில் 12- 13% கடன் வளர்ச்சியினையும், டெபாசிட் வளர்ச்சியானது 8 - 9% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
எஃப்பிஓ-வில் இழப்பு
எல்ஐசி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தற்போதைய 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டில் எந்த பங்கினையும் ஏலம் எடுக்க திட்டமிடவில்லை என அறிவித்துள்ளது. இது அதானி குழும நிறுவனங்கள் மீது, கடந்த வாரம் ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம், தனது வணிக நடைமுறைகளை விமர்சித்ததை அடுத்து, இந்திய குழுமத்தின் பங்கு மதிப்புகளில் 65 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வந்துள்ளது.
எல்ஐசியின் திட்டம்
எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் 736 மில்லியன் டாலரில் 5% பங்கினை வைத்துள்ளது. தற்போது அமலில் இருக்கும் எஃப்பிஓ-வில் எந்த முதலீடும் செய்ய திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளது.
இந்த எஃப்பிஓ-வில் 3112 - 3276 ரூபாய் விலை வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று சந்தை முடிவில் இப்பங்கின் விலையானது 2892.85 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த வெளியீட்டில் வெறும் 3% பங்கிற்கு மட்டுமே சந்தாவினை அதானி குழும நிறுவனம் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications