நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இதனால் மின் உற்பத்தியானது குறைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதனால பல மாநிலங்களிலும் மின் வெட்டு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின் வெட்டு இருந்து வருகின்றது.
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி மூன்று - நான்கு மணி நேரங்கள் மின் வெட்டு ஏற்படுகின்றது. இந்த நிலையானது அக்டோபர் 13 வரையில் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
நிலக்கரி இருப்பு
பஞ்சாப்பில் மின் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால் 50% மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிலக்கரி கையிருப்பும் குறைந்துள்ளது. தனியார் வசம் 1.5 நாட்கள் வரையில் தாங்கும் அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், இதே அரசு இடங்களில் 4 நாட்கள் தாங்கும் அளவுக்கு இருப்பதாகவும் ஞாயிற்றுகிழமையன்று வெளியான அறிக்கைகள் கூறின.
பல மாநிலங்களிலும் பற்றாக்குறை
PSPCL (Punjab State Power Corporation Limited) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வேணுபிரசாத் இது குறித்து கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள நிலக்கரி அடிப்படையிலான அனைத்து ஆலைகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களாக டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் இருந்து வருகின்றது என்றும் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
டாடா பவருடன் ஒப்பந்தம்
இந்த நிலையில் தான் பஞ்சாப் அரசானது டாடா பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள டாடா பவரின் முந்த்ரா ஆலையில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது அனல் மின் நிலையங்களில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
செலவு அடிப்படையில் சப்ளையா?
மேலும் இந்த முந்த்ரா ஆலையில் இருந்து டாடா பவர் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான, உண்மையான எரிபொருள் செலவு அடிப்படையில் சப்ளை செய்யும் என்றும் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கூட இந்த ஆலையில் இருந்து மின்சாரம் வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரம் வாங்கும் பஞ்சாப்
PSPCL வேளாண் உள்ளிட்ட பல தேவைகளுக்கும் மத்தியில், மின்சாரத்தினை வெளியில் இருந்து வாங்குவதாக வேணு கூறியிருந்தார். இது குறித்த அறிவிப்பில் PSPCL அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமையன்று 8788 மெகாவாட் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்தது. இதற்கிடையில் ஞாயிற்றுகிழமையன்று ஒரு யூனிட் மின்சாரம் 11.60 ரூபாய் என்ற விகிதத்தில், 1800 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
எவ்வளவு விலை?
இந்த நிலையில் டாடா பவரிடம் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்க போகிறது? எவ்வளவு விலை? போன்ற யூகங்கள் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications