வட இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் மிக பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் நடத்தப்படுவது வழக்கம். அதுவும் பஞ்சாப் மாநில திருமண நிகழ்வுகள் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக திருமண நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
ஆடம்பரமான உடை, பிரம்மாண்டமான அலங்காரங்கள், வித விதமான உணவுகள், மியூசிக் பார்டி என திருமண நிகழ்வுகள் களைகட்டும். அப்படி சில செல்வந்த குடும்பங்களில் தங்களுடைய அந்தஸ்தை காட்டும் வகையில் பணத்தை வாரி இறைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இது சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகும்.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மணமகன் குடும்பத்தினர் பூக்களுக்கு பதிலாக பணத்தை வாரி இறைத்து மணமகளை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
மணமகள் அலங்காரத்தோடு வந்து நிற்க மணமகன் குடும்பத்தினர் அவர் மீது பணத்தை மழையாக பொழிகின்றனர். இந்த வீடியோ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கங்களில் பலராலும் பகிரப்படும் விஷயமாக இருக்கிறது. மணமகன் குடும்பத்தினர் மணமகளை வரவேற்கவே 8.5 கோடி ரூபாய் பணத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
A video of a Punjabi wedding is being circulated, claiming that ₹8.5 crore was showered. However, Nishan Singh, owner of DJ Majha Block, clarified that only four lakhs of rupees were gathered, and all the notes were of ₹10 denomination. He said that fake news is being spread.… pic.twitter.com/slGCw4HNUZ
— Akashdeep Thind (@thind_akashdeep) February 18, 2026
மணமகள் அலங்காரத்தோடு திருமண வரவேற்பு நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்து நிற்கிறார். முதலில் மணமகன் தன் கையில் இருக்கும் ரொக்க பணத்தை அவர் மீது தூவுகிறார். அதன் பிறகு மணமகன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை மணமகள் மீது தூவி வரவேற்கின்றனர். இது காண்பதற்கு வானில் இருந்து பணம் மழையாக பொழிவது போல காட்சி தருகிறது.
Cash Party என குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவிற்கு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றனர். ஒரு நபர் இந்த பணத்தை ஏழை மக்கள் , வருமானம் இல்லாத மக்களுக்கு வழங்கினால் உங்களை வாழ்த்தி இருப்பார்களே என தெரிவித்திருக்கிறார். ஒரு நபர் அவர்களுடைய பணம் அவர்கள் விருப்பபடி என்ன வேண்டுமானால் செய்து கொள்ளட்டுமே என பதிவு செய்திருக்கிறார். ஒரு சிலர் பணத்தை வாரி இறைத்து பணத்திற்கான மதிப்பை இழக்க செய்து விட்டார்கள் என கூறியிருக்கிறார். இது தேவையற்ற வேலை என ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.
இதற்கிடையே திருமண நிகழ்வில் டிஜே-வாக கலந்து கொண்டவர் நிசான் சிங் வெளியிட்ட வீடியோவில் 8.5 கோடி ரூபாய் அல்ல 4 லட்சம் ரூபாய் தான் பயன்படுத்தப்பட்டது அவை அனைத்து 10 ரூபாய் நோட்டுகள் , பின்னர் அவற்றை மீண்டும் சேகரித்து வைத்து கொண்டார்கள் அந்த பணத்தை வீண் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications