இங்கிலாந்து பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற லிஸ் ட்ரஸ் அவர்கள் பதவி ஏற்ற ஒன்றரை மாதங்களில் திடீரென ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பின்னர் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அவர்கள் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களின் மொபைல் போனை ரஷ்ய அதிபர் புதினின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிஸ் ட்ரஸ் மொபைல் போன் ஹேக்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்காக பணிபுரியும் ரஷ்ய உளவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்கள் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அவருடைய தொலைபேசியை ஹேக் செய்ததாக கூறப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர்
லிஸ் ட்ரஸ் அவர்கள் வெளியிட்ட துறை அமைச்சர் என்பதால் சர்வதேச நாடுகளுடன் நட்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்பதும் அந்த வார்த்தையின் ரகசிய விவரங்களை புதினின் ரகசிய உளவாளிகள் அறிந்து ரஷ்ய அரசுக்கு தெரிவித்ததாகவும் உலகின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் கூட்டாளி
லிஸ் ட்ரஸ் அவர்களின் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அவரது அரசியல் கூட்டாளியான குவாசி குவார்டெங் அவர்களின் மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் பேசிய பல மதிப்புமிக்க செய்திகள் கசிந்து உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கண்டுபிடிப்பு
லிஸ் ட்ரஸ் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தான் இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதன்பிறகு அவர் தனது மொபைலில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது
முக்கிய தகவல்கள்
இந்த சம்பவம் நடந்த பிறகு தான் அவர் இங்கிலாந்து பிரதமர் ஆனார் என்பதும் இங்கிலாந்து பிரதமரான பின் அவர் தனது மொபைல் போனை முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மொபைல் போனில் இருந்து பல முக்கிய தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது
உக்ரைன் போர்
குறிப்பாக லிஸ் ட்ரஸ் சர்வதேச நாட்டு தலைவர்களிடம் பேசும்போது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பற்றிய விமர்சனங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து அவர் பல சர்வதேச நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசிய முக்கிய விவாதங்களும் ரஷ்ய உளவாளிகளால் ஹேக் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லிஸ் ட்ரஸ் அவர்களின் ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன் தற்போது இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications