மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க படைகள் மத்தியில் நடக்கும் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்தமாக வளைகுடா பகுதியில் விமான சேவைகளும், விமான நிலையங்களும் முடங்கியது. குறிப்பாக முக்கிய வர்த்தக நகரமாகவும் மற்றும் டிரான்சிட் நகரமாகவும் இருக்கும் துபாயில் 2 விமான நிலையங்களும் முடங்கிய நிலையில், திங்கட்கிழமை மாலை முதல் சிறிய எண்ணிக்கையில் விமான சேவைகளை துவங்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் பல ஆயிரம் வெளிநாட்டு மக்களும், வெளிநாட்டு பயணிகளும் துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் மாட்டிக்கொண்டனர். இதில் தெலங்கானா விவசாய அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ், நடிகர் அஜித் குமார், பேட்மிண்டன் சாம்பியன் பிவி.சிந்து போன்ற பலர் மாட்டிக்கொண்டனர்.

துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நகரங்களில் இருந்து விமான சேவைகள் முழு வீச்சில் துவங்கவில்லை என்றாலும், சிறிய எண்ணிக்கையில், அவரச காரணங்களுக்காகவும், வெளிநாட்டு பயணிகளுக்காகவும், முக்கிய சரக்கு போக்குவரத்திற்காகும் விமான சேவை நேற்று மாலையில் இருந்து இயங்க துவங்கியுள்ளது.
துபாயில் மாட்டிக்கொண்டதால் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் சாம்பியன் பிவி.சிந்து மார்ச் 3-ஆம் தேதி பிர்மிங்காமில் நடக்கவிருந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை அவர் தவறவிட்டுள்ளார். மேலும் 3 நாட்கள் துபாயில் மாடிக்கொண்ட நிலையில் இன்று காலை பத்திரமாக பெங்களூரில் தரையிறங்கினார். பெங்களூரில் இறங்கியதும் முக்கிய இன்ஸ்டா பதிவை செய்தார்.
துபாயில் சிக்கியது ஏன்?
பிவி.சிந்து சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியிருக்கிறார். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்ல திட்டமிட்டிருந்த சிந்து, துபாய் விமான நிலையத்தில் ஈரான் - இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் மாட்டிகொண்டார். பிவி.சிந்து உடன் அவரது குழு உறுப்பினர்களும் மாட்டிக்கொண்டனர்.
உயிர் தப்பிய பிவி சிந்து
சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் இர்வான்ஷா ஆதி பிரதாமா உட்பட அவரது குழு, தங்களது தங்குமிடம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருந்து தப்பினர். இது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர் எனவும் பிவி சிந்து தெரிவித்தார்.
இந்த 3 நாட்கள் மிகவும் 'தீவிரமாக இருந்தது' என்று சிந்து விவரித்துள்ளார். துபாய் அதிகாரிகள் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று பிவி சிந்து பாராட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் சிந்து பதிவு
இந்தியா திரும்பிய பிறகு சிந்து தனது எக்ஸ் கணக்கில் "பெங்களூரு திரும்பியுள்ளேன், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்" என்று கூறிய அவர், கடந்த 3 நாட்கள் 'தீவிரமாகவும் மற்றும் நிச்சயமற்றவையாகவும்' இருந்தது என்று விவரித்தார்.
துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், இம்மிக்ரேஷன் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இப்போது ஓய்வு எடுத்து, அடுத்த கட்டத்தை திட்டமிடுவேன் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications