இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து விரைவில் தனது திருமண வாழ்க்கையில் நுழைய போகிறார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்ற இவர் டிசம்பர் 11, 2024 அன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரான வெங்கட தத்தா சாய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவருக்கும் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உதய்பூரில் பிரமாண்டமான திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என்வும், திருமண வரவேற்பு டிசம்பர் 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 7, 2025 இல் தொடங்கும் மலேசிய ஓபனுக்கான ஏற்பாடுகள் உட்பட, வரவிருக்கும் சீசனுக்கான அவரது பிஸியான கால அட்டவணையை மனதில் கொண்டு திருமண தேதி திட்டமிடப்பட்டதாக சிந்துவின் தந்தை பி.வி. ரமணா கூறியுள்ளார்.

வெங்கட தத்தா சாய் யார்?: ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கியான வெங்கட தத்தா சாய், Posidex டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் தொழில்நுட்பம், நிதி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் தனது ஆர்வத்தை கொண்டுள்ளார். அதேபோல், கல்வி மற்றும் தொழில்துறையில் பல்வேறு சாதனை படைத்துள்ளார். இவர் 2018 இல் ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் தனது பிபிஏ முடித்துள்ளார். அதைதொடர்ந்து பெங்களூருவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு அறிவியல் மற்றும் இயந்திர கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் டிப்ளமோவும் முடித்துள்ளார்.
தத்தாவின் தொழில்முறை நிபுணத்துவம் சிக்கலான நிதி நடவடிக்கைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் உள்ளது. லிங்கிட்இன்-ல் அவர் வெளியிட்ட தனது பணி பற்றிய நுண்ணறிவுகள் அடிப்படையில், தீர்வுகள் மற்றும் தயாரிப்புகள் எச்டிஎஃப்சி முதல் ஐசிஐசிஐ வரையிலான சில பெரிய வங்கிகளில் முக்கியமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

அதேபோல், கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றிக்கு கூடுதலாக உழைத்துள்ளார். அதாவது, தத்தாவுக்கு விளையாட்டு துறையிலும் தொடர்பு உள்ளது. ஜேஎஸ்டபிள்யூவில் அவர் பணிபுரிந்தபோது, ஐபிஎல் உரிமையான டெல்லி கேபிடல்ஸ் நிறுவனத்திற்கான செயல்பாடுகளை நிர்வகித்து வந்துள்ளார். இந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஐபிஎல் அணியை நிர்வகிப்பதை ஒப்பிடுகையில் நிதி மற்றும் பொருளாதாரத்தில் எனது பட்டப்படிப்பு பிபிஏ மந்தமானது என்றும், ஆனால் இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று தத்தா பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண விழாக்கள்: பிவி சிந்துவின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிலையில், திருமணம் பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சிந்து, வரவிருக்கும் ஒலிம்பிக் சுழற்சிக்குத் தயாராக உள்ளதாகவும், எனவே திருமணம் முடிந்து விரைவில்தனது கடுமையான பயிற்சியை மீண்டும் தொடங்குவார் என்றும், அவரது தந்தை கூறினார். பேட்மிண்டனில் தனது அபார சாதனைகளால் நாட்டிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்துவிற்கு இது ஒரு அழகான புதிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications