நீங்க தீவிர சினிமா ரசிகராகவும், அதேநேரம் சினிமாவை சிறப்பான பிக்சர் மற்றும் சவுண்ட் தரத்தில் கண்டு மகிழ வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு இந்த திட்டம் உண்மையிலேயே வர பிரசாதம் என்றே சொல்லலாம்.
அதேபோல் வாரத்தில் 3 படமாவது தியேட்டரில் பார்க்கும் நபராக நீங்கள் இருந்தாலோ அல்லது பிடித்த ஹீரோவின் படத்தை பல முறை பார்க்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாலோ PVR Inox தியேட்டரின் புதிய திட்டம் உண்மையிலேயே ஜாக்பாட் தான்.

மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய் விலையில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வார நாட்களில் மட்டுமே செல்லுப்படியாகும், அதாவது சனி மற்றும் ஞாயிறு செலுப்படியாகாது.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு வார நாட்களில் சுமார் 10 திரைப்படங்களை ஒவ்வொறு திரைப்படத்தையும் வெறும் 70 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் என்று பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்தால் இந்தியாவில் திரையரங்குகளில் வழங்கப்படும் முதல் திரைப்பட சப்ஸ்கிரிப்ஷன் சலுகை இதுவாகும். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம் தென்னிந்திய பகுதியில் இல்லை என்பது தான்.
திரைப்படங்கள் மீது தீரா காதலர்களாக இருக்கும் தென்னிந்தியாவில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் வேகமாக விரிவாக்கம் செய்து வரும் வேளையில் இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடலை கொண்டு வர திட்டமில்லை என கூறப்பட்டதாக பிவிஆர் ஐநாக்ஸ் கூறியதாக மனிகன்ட்ரோல் தெரிவிக்கிறது. மேலும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் இன்சிக்னியா, ஐமேக்ஸ் போன்ற பிரீமியம் ஸ்கிரீனில் கிடைக்காது.
அடுத்த முக்கிய செக் ஆக இந்த திட்டத்தில் டிக்கெட் வாங்குவோர் ஒரு நாளுக்கு ஒரு டிக்கெட் மட்டுமே வாங்க முடியுமாம். பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் தனது திரையரங்குகளில் தினமும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை இலக்காக கொண்டு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஒப்பிடுகையில் இன்னும் 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் குறைவாகவே வருகின்றனர்.


Click it and Unblock the Notifications