இந்திய மக்களின் வாழ்க்கையில் திரைப்படங்கள் ஒரு அங்கமாக உள்ள நிலையில், வருடம் முழுவதும் மொழி வாரியாக புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டே உள்ளது. இதனால் இந்திய திரைப்பட துறை முக்கிய வர்த்தக பிரிவாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் லீஷர் லிமிடெட் உடன் இணைந்த பிறகு, சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் 11 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ்-ஐ புதிதாக திறந்துள்ளது என்று இக்கூட்டணி நிறுவனம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் புதிய மைல்கல்-ஐ எட்டியுள்ளது பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி.
பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி
பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் லீஷர் லிமிடெட் கூட்டணி இந்தியா திரையரங்கு வரத்தகத்தில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது மட்டும் அல்லாமல், இக்கூட்டணி நாட்டின் பெரு நகரங்கள் அனைத்திலும் தொடர்ந்து முதலீடு செய்தும், நஷ்டத்தில் இருக்கும் திரையரங்குகளை கைப்பற்றியும், திரையரங்குகளை அதிகரித்து வருகிறது.
சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி
இந்த நிலையில் பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் புதிதாக 11 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திறந்துள்ளது. INOX Leisure உடன் இணைந்ததைத் தொடர்ந்து, PVR சென்னையில் மட்டும் 100 திரைகள் என புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சென்னை
சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமா-வின் தலைநகரும் கூட, ஒவ்வொரு வாரமும் பெரிய ஸ்டார்களின் படத்தின் வெளியிடும் திருவிழா போல கொண்டாடப்படும் வேளையில் சென்னையில் பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி 100 திரைகளை கொண்டு திரையரங்கு வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
சென்னையில் மட்டும் 105 திரைகள்
சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் புதிய திரையரங்கு மூலம் சென்னையில் மட்டும் சுமார் 16 திரையரங்குகளில் மொத்தம் 105 திரைகளுடன் இனி வர்த்தகம் செய்ய உள்ளது. பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி நிறுவனம் மொத்தம் 22 சொத்துக்களில் 136 திரைகளுடன் தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தியுள்ளது.
தென்னிந்தியா
இதேபோல் பிவிஆர் - ஐநாக்ஸ் கூட்டணி தென்னிந்தியாவில் 93 சொத்துக்களில் 519 திரைகள் உடன் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தியுள்ளது. தொடர்ந்து தென்னிந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது கூட்டணி. சென்னையில் ஒட்டுமொத்த திரை எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 105 என்பது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் இதன் பங்கீடு அதிகம்.
அஜய் பிஜ்லி
பிவிஆர் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி இதுக்குறித்து கூறுகையில் பிராந்திய சினிமா மற்றும் ஆர்வமுள்ள நுகர்வோர் தேவை ஆகியவற்றின் நிலையான திரைப்படங்கள் வெளியீடு மூலம் தெற்கு பிராந்தியம் ஒரு முக்கியமான சந்தையாக எங்களுக்கு உள்ளது.
2,688 பேர்
ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள புதிய திரையரங்குகளில் சுமார் 2,688 பேர் அமரும் திறன் கொண்டது மற்றும் சென்னையில் உள்ள பிவிஆரின் இரண்டாவது இடமான IMAX ஐக் கொண்டுள்ளது. இது நாட்டின் 17வது IMAX திரையாகும், இது மிகப்பெரிய IMAX பார்ட்னராக உள்ளது என்று PVR சினிமாஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications