இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்க நிறுவனமான PVR INOX ஒன்றாக இணைந்த நாளில் இருந்து பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் அதிகப்படியான மக்களை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து விரிவாக்க பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவான வாடிக்கையாளர்களையே திரையரங்குகள் பெற்று வருகிறது. அதிலும் வார நாட்களில் மிகவும் குறைவான வாடிக்கையாளர்களை பெற்று வரும் காரணத்தால் டிக்கெட் விற்பனைக்கும், இயக்க செலவுகளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

இதை சரி செய்யும் பொருட்டு PVR INOX கொண்டு வந்த திட்டம் தான் பாஸ்போர்ட் என்ற சினிமா சப்ஸ்கிரிப்ஷன் திட்டம். அக்டோபர் 16 ஆம் தேதி முதல் இத்திட்டம் மக்கள் மத்தியில் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில், இத்திட்டம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் திட்டம் குறித்து முழு தகவல்களையும் தெரிந்துக்கொண்டு இது லாபமா, நஷ்டமா என்பதை கணக்கிடுங்கள். இதேபோல் PVR INOX Passport என்ற சினிமா சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை எப்படி பெறுவது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
PVR INOX Passport திட்டம் : ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் தொகை 699 ரூபாயாகும். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 திரைப்படங்களை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஒருவர் பார்க்க முடியும். ஆனால் இந்த திட்டம் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் ஒரு நாளுக்கு 1 திரைப்படத்தை மட்டுமே பார்க்க முடியும்.
கூடுதல் கட்டணம் : இதைவிட முக்கியமாக PVR INOX Passport திட்டத்தின் கீழ் 350 ரூபாய்க்கு கீழ் உள்ள டிக்கெட்கள் மட்டும் இலவசமாக கிடைக்கும், கூடுதலான தொகை கொண்ட டிக்கெட்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் தேர்வு செய்யும் டிக்கெட் விலை 450 ரூபாய் எனில் PVR INOX Passport திட்டத்தை வாங்கிய ஒருவர் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு இல்லை : PVR INOX Passport திட்டம் தென்னிந்தியா மாநிலங்களிலும் சில குறிப்பிட திரையரங்குகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் மூலம் சென்னை, வேலூர், மதுரை, கோயம்புத்தூரில் இருக்கும் PVR INOX தியேட்டர்களில் இத்திட்டம் பயன்படாது. இதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் இது பயன்படுத்த முடியாது.
செல்லாது செல்லாது : இதேபோல் PVR INOX Passport வைத்துக்கொண்டு பிவிஆர் ஐநாக்ஸ்-ன் ICE, IMAX, 4DX, Playhouse, GOLD, LUXE, P[XL], Drive-In, Director's Cut, BigPix, Kiddles, MX4D, ScreenX, Insignia திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாது. PVR INOX Passport வைத்துக்கொண்டு சாதாரண திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். ஒருவர் இத்திட்டத்தை அதிகப்படியாக 3 மாதங்கள் வரையில் ஒரே பேமெண்ட் செய்து வாங்க முடியும்.
ஒருவனுக்கு ஒன்று மட்டும்: மேலும் PVR INOX Passport திட்டத்தை ஒரு நபருக்கு தான் பயன்படுத்த முடியும். இதேபோல் ஒரே நபர் பலருக்கு டிக்கெட் புக் செய்ய முடியாது, மேலும் இந்த திட்டத்தை பிறருக்கு டிரான்ஸ்பர் செய்ய முடியாது. எனவே ஒருவர் PVR INOX Passport திட்டத்தை 699 ரூபாய் கொடுத்து வாங்கினால் அவர் மட்டுமே அதை பயன்படுத்த முடியும்.
ஒரு படம் ஒரு முறை பாலிசி : மேலும் ஒரு நபருக்கு ஒரு படத்திற்கு மட்டும் தான் இத்திட்டத்தை பயன்படுத்த முடியும். லியோ படத்தை 6 முறை யெல்லாம் இத்திட்டத்தை வைத்து பார்க்க முடியாது.
PVR INOX Passport பெறுவது எப்படி? :
முதல் படி : PVR அல்லது INOX இணையதளத்திற்கு சென்று லாக்இன் செய்யுங்கள்.
2வது படி : privilege என்பதை மெனுவில் இருந்து தேர்வு செய்யவும். அல்லது இணையத்தளத்தின் முகபக்கத்திலேயே பேனர் இருக்கும் அதை கிளிக் செய்தும் உள்ளே செல்ல முடியும்.
3வது படி : விதிமுறைகளை ஏற்பதாக உறுதி அளிக்க செக்பாக்ஸ்-ல் டிக் செய்துவிட்டு தேவையான விபரங்களை கொடுக்க வேண்டும்.
4வது படி : பேமெண்ட் பணிகள் முடிந்த உடன், PVR INOX Passport திட்டத்தை பெற்றுள்ளதை உறுதி செய்யும்.
இப்போ சொல்லுங்க PVR INOX Passport வொர்த்தா..?


Click it and Unblock the Notifications