இந்தியாவின் புகழ்பெற்ற திரையரங்கு நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் 2025ஆம் நிதியாண்டில் 70 திரையரங்குகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் புதிதாக 120 திரையரங்குகளை திறக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் 2024ஆம் நிதியாண்டிலேயே சரியாக லாபம் தராத 85 திரையரங்குகளை மூடியது.
அதன் தொடர்ச்சியாக 2025ஆம் நிதி ஆண்டிலும் சரிவர செயல்படாத பகுதிகளில் இருக்கும் 70 திரையரங்குகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விபரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 2024ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் பிவிஆர் நிறுவனம் 130 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இது 333 கோடி ரூபாயாக இருந்தது. எனவே நஷ்டத்தின் அளவு தற்போது குறைந்துள்ளது. அதே வேளையில் பிவிஆர் ஐநாக்ஸின் ஆப்பரேட்டிங் ரெவென்யு அதாவது செயல்பாட்டு வருவாய் 1,143 கோடியிலிருந்து 1,256 கோடி ரூபாய் என 10 % அதிகரித்துள்ளது.
மொத்தமாக 2024 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3,751 கோடியில் இருந்து, 6,107 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2025ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக பிவிஆர் ஐநாக்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி சரிவர செயல்படாத 70 திரையரங்குகளை மூடிவிட்டு, சரியான இடங்களில் 120 திரையரங்குகளை திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் தென்னிந்திய சந்தையில் தங்களது கவனம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
அதே வேளையில் 2025 ஆம் நிதி ஆண்டில் தங்களுடைய செலவினங்களில் 25 சதவீதத்தை குறைக்க போவதாக பிவிஆர் ஐநாக்ஸ் வெளியிட்டுள்ள ஆண்டு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாட்டு செலவினங்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதே இந்த ஆண்டில் தங்களது இலக்கு என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக 300 முதல் 400 கோடி மதிப்பில் தங்களிடம் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்ய பரிசீலனை நடந்து வருவதாக கூறியுள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் தங்களுடைய வளர்ச்சிக்காக நான்கு முக்கிய கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி மூவி பாஸ்போர்ட் என்ற ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. வார நாட்களிலும் மக்களை திரையரங்குக்கு வரவழைக்க இந்த திட்டம் பயன்படும் என கூறியுள்ளது.
சினிமா லவ்வர்ஸ் டே என்ற ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர இருக்கிறது. குறிப்பிட்ட நகரங்களில் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடிகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி திரைப்பட விழாக்கள் மற்றும் லைவ் கன்சர்ட்டுகள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் நடத்தப் போவதாக பிவிஆர் ஐநாக்ஸ் அறிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications