தணிக்கை நிறுவனமான PWC கொரோனா காலத்தில் தனது ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றியதைப் பாராட்டும் வகையில் சுமார் 1500 ஊழியர்களுக்கு ஒன்டைம் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்புக் காலத்தில் வர்த்தகத்தைச் சமாளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. குறிப்பாகப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகத்தை நிர்வாகம் செய்வதிலும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதிலும் கடும் போராட்டம் நிலவியது.

இந்த நிலையிலும் PWC இந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தவும், பல கடுமையான சூழ்நிலைகளைச் சமாளித்து நிறுவனம் மற்றும் வர்த்தகம் வலிமை அடைந்துள்ளது. இதேவேளையில் நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் மத்தியிலான உறவும் இந்தக் காலத்தில் மேம்பட்டு உள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் இந்தக் கடுமையான முயற்சியைப் பாராட்டுவது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் இலக்கையும் இந்தப் போராட்டம் மிகுந்த காலகட்டத்தில் அடைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒன்டைம் போனஸ் அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் படி PWC இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் 2 வார சம்பளத்தைப் போனஸ் ஆக வழங்கப்பட உள்ளது. இந்தப் போனஸ் தொகை மார்ச் 2021 மாத சம்பளத்தில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வை இந்தப் போனஸ் எந்த வகையிலும் பாதிக்காது எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications