ஏஐ இல்லாமல் இனி எந்த துறையும், எந்த வேலையும் இயங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் வேலைவாய்ப்பு சந்தையில் உருவாகியுள்ளது எனவும், இதன் மூலம் புதிதாக பட்டம் பெற்று வரும் பட்டதாரிகள், இளம் ஊழியர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழந்து வருவதாக ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தின் பொருளாதார வல்லுனர் எரிக் பிரைன்ஜோல்ஃப்சன் எச்சரிக்கிறார்.
ஒவ்வொருவரின் வேலையிலும் பல பணிகள் அடங்கியிருக்கும், அதில் பலவற்றை ஏஐ மூலம் ஆட்டோமேட் செய்யப்பட்டாலும் ஏஐ செய்த வேலையை ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்து, சரியான முறையில் அதை நிர்வாகம் செய்வது என விஷயம் இதில் உள்ளதால் மனிதர்களே இல்லாமல் வேலை செய்ய முடியும் என்ற நிலை தற்போது இல்லை.

தற்போதைய பிரச்சனை என்னவென்றால் எத்தகைய வேலைகள் ஆட்டோமேட் செய்யப்படுகிறது..? அதன் மூலம் யார் பாதிக்கப்படுகிறார்கள்..? என்பதில் தான்.
இந்த ஏஐ காலத்தில் அதிகளவில் வேலையை இழப்பது, வேலையை பெற முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது பிரஷ்ஷர்கள் அல்லது 22-26 வயதானவர்கள் தான்.
இவர்கள் பணியாற்றும் பெரும்பாலான துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இதேபோல் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏஐ என்பதை அடிப்படை அல்லது ஆரம்பக்கட்ட பணிகளை தான் தற்போது ஆட்டோமேட் செய்து வருகின்றனர். இதனால் பிரஷ்ஷர்கள் செய்யும் தொடர்ச்சியான பணிகளை ஆட்டோமேட் செய்யப்படும் காரணத்தால் இவர்களுக்கான வாய்ப்புகளும், சம்பளம் வரும் அடுத்த சில வருடத்தில் பெரிய அளவில் குறையும் என எச்சரித்துள்ளார் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தின் பொருளாதார வல்லுனர் எரிக் பிரைன்ஜோல்ஃப்சன்.
பொதுவாக ஒவ்வொரு நிறுவனமும் அதிகளவிலான பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தி இயங்கும், ஆனால் ஏஐ வந்த பின்பு என்டரி லெவல் பணிகள் பெரிய அளவில் குறைய உள்ளது. இதனால் pyramid ஸ்டக்சர் இனி diamond ஸ்டக்சர் ஆக மாறும் எனவும் எச்சரித்துள்ளார் எரிக்.
pyramid ஸ்டக்சரில் என்டரி லெவல் ஊழியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள், இதன் பின் சிறிய மிட் லெவல், அதைவிட குறைவாக சீனியர் லெவல் இருப்பார்கள். ஆனால் Diamond ஸ்டக்சரில் என்டரி லெவல் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் லெவல் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும். மிட் லெவல் மட்டும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் செலவுகளை குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். இதேபோல் என்டரி லெவல் ஊழியர்கள் பணியை ஏஐ ஆட்கொள்ளும்.


Click it and Unblock the Notifications