இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைய மிக முக்கியக் காரணமாக இருந்த ஒன்று முன்னணி நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் தான்.
இன்று டைட்டன், ஏர்டெல், ஐநாக்ஸ், பாங்க் ஆப் இந்தியா, அதானி எண்டர்பிரைசர்ஸ் உட்படப் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடப்பட்டு உள்ளது.
டைட்டன் நிறுவனம்
ஜூன் காலாண்டு முடிவில் டைட்டன் நிறுவனம் சுமார் 61 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் டைட்டன் நிறுவனம் சுமார் 270 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
இதேபோல் இந்நிறுவனம் இக்காலாண்டில் 3,249 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைச் செய்துள்ளது இது கடந்த நிதியாண்டை விடவும் 74.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இக்காலாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக இந்நிறுவனம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் டைட்டன் நிறுவன பங்குகள் 2.14 சதவீதம் சரிந்து 1799.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்
இந்தியாவின் முன்னணி வீட்டுக்கடன் சேவை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டு முடிவில் மொத்த லாப அளவீடு 5 சதவீதம் சரிந்து 243.28 கோடி ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 257.18 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, இது மார்ச் காலாண்டில் 127 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,692.88 கோடி ரூபாயாக உள்ளது. இது மார்ச் காலாண்டில் 1,872.33 கோடி ரூபாயாக இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் வரையில் உயர்ந்து 720.45 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
அதானி குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ் ஜூன் காலாண்டில் 266 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 66 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் லாபம் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதே ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2020 ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் அளவு 2 மடங்கு அதிகரித்து 12,579 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 0.94 சதவீதம் வரையில் சரிந்து 1429.45 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஜூன் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த லாபம் கடந்த ஆண்டை விடவும் கிட்டதட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 121 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த ஜூன் காலாண்டில் 327 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றது.
ஜூன் காலாண்டில் பல வாராக் கடனில் இருந்து அதிகளவிலான பணம் வசூல் செய்யப்பட்ட காரணத்தால் இக்காலாண்டில் அதிக லாபம் கிடைத்துள்ளது.
பார்தி ஏர்டெல்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் லாபத்தில் 62.7 சதவீதம் சரிவைப் பதிவு செய்து 284 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.03 சதவீதம் வரையில் சரிந்து 574.20 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஐநாக்ஸ்
இந்தியாவின் முன்னணி மல்டிபிலெக்ஸ் நிறுவனமான ஐநாக்ஸ் ஜூன் காலாண்டில் 122.28 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 73.64 அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக ஐநாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட காரணத்தால் இந்த நிலை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications