இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் மற்றம் டிஜிட்டல் சேவையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தி அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவில் டிஜிட்டல் உலகை அமைக்கத் திட்டம் தீட்டி வரும் நிலையில் அடுத்தகட்டமாக புதிய முதலீட்டை பைபர் வர்த்தகத்தில் ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான InvIT-ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தில் சுமார் 1.5 பில்லியன் டாலர் தொகையை முதலீட்டைச் செய்யக் கத்தார் அரசு முதலீட்டு நிறுவனமான Qatar Investment Authority (QIA) பேச்சுவராத்தை நடத்தி வருகிறது.
தற்போது இரு தரப்புக்கு மத்தியிலான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
1.5 பில்லியன் டாலர்
ஜியோ டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்தது மூலம் ஜியோ சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜியோ தற்போது தனது பைபர் சேவை பிரிவில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
பைபர் நெட்வொர்க்
InvIT-ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனம் தற்போது இந்தியாவில் சுமார் 7 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலான பைபர் நெட்வொர்கை நிர்வாகம் செய்து வரும் நிலையில் தற்போது Qatar Investment Authority நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் அதாவது 11,200 கோடி ரூபாய் முதலீடு மூலம் பைபர் நெட்வொர்க்-ஐ 11 லட்சம் கிலோமீட்டர் வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனம்.
மிகப்பெரிய வாய்ப்பு
பைபர் நெட்வொர்க் வர்த்தகம் தான் ஜியோவின் எதிர்காலத்தைக் கட்டமைக்கப்போகும் அடித்தளம். ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் அதிகவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையுமின்றிக் கொடுப்பது மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை மிகக் குறைந்த விலையில் கொடுப்பதற்கு இந்தப் பைபர் நெட்வொர்க் அடிப்படையாக இருக்கும்.
இந்த மாபெரும் திட்டத்தில் தற்போது Qatar Investment Authority நிறுவனம் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபி முதலீட்டு நிறுவனம்
ஜூன் மாத துவக்கத்தில் ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான Abu Dhabi Investment Authority ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கத்தார் முதலீட்டு நிறுவனம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
1.5 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய InvIT- ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டே அபுதாபி முதலீட்டு நிறுவனம் முதலீடு செய்ய இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் வர்த்தகம் மற்றும் செயலாக்கம் விதிமுறைகளை அபுதாபி நிறுவனம் விரும்பாத நிலையில் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது கவணிக்க வேண்டியது.
மேலும் கடந்த மாதம் துவக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிலை குறித்து இரு தரப்பு நிறுவனங்களும் எவ்விதமான கருத்தையும் வெளியிடவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications