ஆர்வம், விடாமுயற்சி, திடமான மனம் ஆகிய மூன்று கோல்டன் விதிகள் தான் வெற்றியின் சூத்திரங்களாகும். ஹாவெல்ஸ் நிறுவனம் இதில் உறுதியாக உள்ளது. சிறந்த நிர்வாகத்துக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்ற நிறுவனமாக ஹாவெல்ஸ் இருந்தது. இந்த சிறப்பு மிக்க பிராண்டுக்குப் பின்னால் கிமாத் ராய் குப்தா என்ற மனிதர் இருந்தார்.
1971 ஆம் ஆண்டு ஹாவெலி ராம் காந்திக்கு பெரும் தொகை அளித்து ஹாவெல்ஸ் பிராண்டின் பெயரை விலைக்கு வாங்கினார். ஹாவெல்ஸ் நிறுவனம் மல்ட்டி மில்லியன் டாலர் தொழிலாகி மக்கள் மத்தியில் பெரும் பெயரைப் பெற்றது.

கிமாத் ராய் குப்தாவின் குழந்தைப்பருவம் இந்தியப் பாரம்பரியத்தை சார்ந்திருந்தது. அவரது இளம் வயதில் அவரது பெற்றோரால் பகவத் கீதையின் போதனைகள் அனைத்தும் சொல்லித் தரப்பட்டிருந்தது.
1937 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கிமாத் ராய் குப்தா, 1958 ஆம் ஆண்டில் தனது படிப்பை முடித்தார்.
பின்னர் அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்த பின்னர் அங்கு அவர் குப்தாஜி அண்டு கம்பெனியை தொடங்கினார். அது ஒரு எலக்ட்ரிகல் சாமான்கள் டிரேடிங் கம்பெனி ஆகும். எலக்ட்ரிகல் சாமான்கள் மொத்த வியாபாரம் நடக்கும் பாகிரத் பிளேஸில் அந்த தொழிலை குப்தா ஆரம்பித்தார்.
சிறிய எலக்ட்ரிக் பொருள்களை விற்கும் தொழிலை தொடங்கி நாளடைவில் நாடெங்கும் பல சிறந்த உற்பத்தி ஆலைகளை தொடங்கினார் குப்தா. 1971 ஆம் ஆண்டில் FMEG இண்டஸ்ட்ரீஸை தொடங்கினார். அப்போதுதான் ஒரு திருப்புமுனையாக ஹாவெல்ஸை ஹாவெலி ராம் காந்தி என்பவரிடமிருந்து பெரும் தொகையை விலை கொடுத்து குப்தா வாங்கினார்.
மக்களின் நம்பிக்கையை பெற்ற ஹாவெலி ராம் காந்தியின் தாத்தாவும் பேஷன் டிசைனருமான ரோஹித் காந்தியின் கம்பெனியாக ஹாவெல்ஸ் இருந்தது. தொடக்கக் காலத்தில் குப்தா அந்த கம்பெனியின் ஒரு டிஸ்ட்ரிபியூட்டராக இருந்தார். அதை விலைக்கு வாங்கியதும் நம்பமுடியாத அளவுக்கு விற்பனையை உயர்த்தினார்.
வயர் கேபிள்கள், லைட்டிங், அப்ளையன்சஸ், பேன்கள், கீஸர்கள் ஆகியவற்றையும் ஏராளமாக விற்பனை செய்தார். தற்போது ஹாவெல்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அனில் ராய் குப்தா உள்ளார்.
1992 ஆம் ஆண்டு ஹாவெல்ஸில் அவர் பணியாற்றத் தொடங்கினார். அவரது தந்தை குப்தாவின் வழிகாட்டுதலுடன் ஹாவெல்ஸ் நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றார். 2007 ஆம் ஆண்டு ஜெர்மன் லைட்டிங் சிஸ்டம் உற்பத்தியாளரான சில்வானியாவை அனில் ராய் குப்தா விலைக்கு வாங்கினார்.
2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது ஹாவெல்ஸ் நிறுவனத்தை நஷ்டம் ஏற்படாமல் கட்டிக் காத்ததில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் உள்ள வேக் பாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் அனில் ராய் குப்தா எம்பிஏ பட்டம் படித்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் காலேஜ் ஆப் காமர்ஸில் எக்கனாமிக்ஸ் படித்தார்.
ஹாவெல்ஸ் இந்தியாவின் கிமாத் ராய் குப்தா தனது 77 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்களாகும்.


Click it and Unblock the Notifications