சென்னை: அமெரிக்க மின்னணு நிறுவனமான குவால்காம், சென்னையில் உள்ள ராமானுஜன் தகவல் தொழில்நுட்ப நகரில் இன்று (மார்ச் 14) தனது புதிய வடிவமைப்பு மையம் அதாவது டிசைன் சென்டர் திறக்கப்பட்டது.
இந்த டிசைன் சென்டரை குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன் இன்று திறந்து வைத்தார், இவருடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருந்தார், இதோடு அஸ்வினி வைஷ்ணவ் டிவிட்டரில் ஒரு வீடியோவையும் பதிவிட்டார்.

புதிய வேலைவாய்ப்புகள்: ஜனவரி மாதம் நடந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் டிசைன் சென்டர் திறப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தில் சுமார் ரூ. 177 கோடி முதலீடு செய்யப்படும் என குவால்காம் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த டிசைன் சென்டரில் சுமார் 1600 திறன் படைத்த தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற உள்ளனர்.
பெரிய அளவிலான விரிவாக்கம் சாத்தியம்: குவால்காம் நிறுவனம், சென்னையில் உள்ள இன்டெல்லியன் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 7 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இதனைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் பெரிய அளவிலான விரிவாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டு: " இந்தியாவில் முழுமையான செமிகண்டக்டர் சூழலை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவு. இன்று சென்னையில் குவால்காம் நிறுவனத்தின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மையம் திறக்கப்பட்டு, இந்தக் கனவில் இன்னொருபடி முன்னேறியுள்ளது இந்தியா என அஸ்வினி வைஷ்ணவ் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்திய உடை: இதை தொடர்ந்து அஸ்வினி வைஷ்ணவ் டிவிட்டரில் சென்னையில் குவால்காம் டிசைன் சென்டரை திறந்தமைக்கு நன்றி தெரிவித்த பின்பு, இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்த கிறிஸ்டியானோ அமோனுக்கு சிறப்பு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஆதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி டிவிட்டரில் குவால்காம் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ ஆர் அமோன் அவர்களை சந்தித்தது குறித்த பதிவை பகிர்ந்து கொண்டார். இந்த ஒரு பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செமிகண்டக்டர் சிப் மற்றும் வயர்லெஸ் தகவல் தொடர்பு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பன்னாட்டு நிறுவனம் குவால்காம் இந்தியாவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் அதானி உடனான சந்திப்பு பலரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டிவிட்டர் பதிவில் கௌதம் அதானி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, மொபைல் தொழில்நுட்பம் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் (Edge Computing) போன்ற துறைகளுக்கான குவால்காமின் தொலைநோக்கு திட்டங்களை கௌதம் அதானி பாராட்டியுள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications