அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 0 சதவீத வட்டியில் தனது பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் உயர்த்திய அமெரிக்கா தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உடன் தடுமாற துவங்கியுள்ளது.
இதில் முக்கியமாக அமெரிக்க அரசு தனது ஷட்டவுன் பிரச்சனையில் கடைசி நேரத்தில் சிறப்பு மசோதா மூலம் தப்பித்துள்ளதுய. இந்த நிலையில் அதீத வட்டி விகிதம் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தற்போது தடுமாற துவங்கியுள்ளது. இதேவேளையில் சர்வதேச வர்த்தகமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதற்கு மத்தியில் தான் அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம்-ன் சான் டியாகோ மற்றும் சான்டா கிளாரா, கலிபோர்னியா-வில் உள்ள ஊழியர்களில் சுமார் 1,258 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கலிபோர்னியா வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையில், குவால்காம் பணிநீக்கம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குவால்காம் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 50,000. இதில் இன்ஜினியரிங் பிரிவில் மட்டுமே சுமார் 750க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்லது. மேலும் இன்ஜினியரிங் பிரிவில் இயக்குநர் முதல் தொழில்நுட்ப வல்லுநர் வரையிலான பல முக்கிய நிலை ஊழியர்களும் இதில் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
எஞ்சியுள்ள பணிநீக்கம் அனைத்தும் பிற தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அக்கவுன்டிங்போன்ற பரிவுகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் டிசம்பர் மாத இறுதியில் இருந்து துவங்க உள்ளது.

குவால்காம் பணிநீக்கம் குறித்து கலிபோர்னியா வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எத்தனை பேரை பணிநீக்கம் செய்யப்போகிறது, எவ்வளவு சதவீதம் வரையில் பணிநீக்கம் செய்யப்படுகிறது என்போன்ற முக்கியமான விஷயங்களை தெரிவிக்கவில்லை. ஆனால் பணிநீக்க நடப்பதை உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications