இந்திய மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரூ.93,000 கோடி அளவிலான நிதியை நிர்வகிக்கும் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு Front-Running மோசடி செய்ததாக சந்தேகித்துச் செபி (SEBI) அமைப்பு இந்நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியது.
இந்த நிலையில், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செபி-க்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம், அதேபோல் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான லாபத்தை அளிப்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

செபி அதிகாரிகள் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு இடங்களில் இருக்கும் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் Front-Running குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
Front-Running என்றால் என்ன?:
பங்குச் சந்தையில் பெரிய அளவிலான பங்குகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ மியூச்சுவல் ஃபண்டுகள் "டீலர்" எனப்படும் இடைத்தரகர்களை நம்பி இருக்கின்றன. இந்த இடைத்தரகர்கள் தங்களது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சிப்பதே இந்த Front-Running மோசடி.
Front-Running எப்படி வேலை செய்கிறது?:
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பெரிய அளவிலான பங்குகளை வாங்க அல்லது விற்பனை செய்யத் தயாராக இருக்கும் தகவல் இடைத்தரகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். இதனைப் பயன்படுத்தி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சந்தைக்குள் நுழையும் சில நிமிடங்களுக்கு முன்பே அந்தந்த பங்குகளை இடைத்தரகர்கள் வாங்கத் தொடங்குவார்கள்.
இதன் காரணமாக, மியூச்சுவல் ஃபண்ட் பெரிய அளவில் பங்குகளை வாங்கும் போது, பங்குகளின் விலை உயரும். இதனைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் பங்குகள் விலை அதிகரித்த பின்னர் லாபத்தில் பங்குகளை விற்பனை செய்வார்கள்.
இதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாகத் தகவல் கிடைத்தால், இடைத்தரகர்கள் அந்த பங்குகளை "ஷார்ட் செல்" (Short Sell) செய்வார்கள். அதாவது, பங்குகளின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில், விலை உயரும் என்ற கருத்தை உருவாக்கி பங்குகளை விற்பனை செய்வார்கள். பின்னர், பங்குகளின் விலை உண்மையில் குறையும் போது, குறைவான விலையில் பங்குகளை வாங்கி லாபம் ஈட்டுவார்கள்.
இதுபோன்ற பரிவர்த்தனைகள் இடைத்தரகர்களின் சொந்த கணக்குகளில் செய்யப்படாமல், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் போன்றோரின் கணக்குகளில் செய்யப்படும்.
Front-Running ஏன் சட்டவிரோதமானது?:
இது மிகவும் தவறான வர்த்தக முறையாகும். பொது சந்தைக்கு வெளிவராத தகவல்களை வைத்து ஒரு ப்ரோகரேஜ் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது.
முதலீட்டாளர்களின் பணத்தைச் சுரண்டி லாபம் ஈட்ட, ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி மொத்த பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் ஏமாற்றுவது பெரும் தவறாகும், இதனால் பல முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை இழக்கக் கூடும். இது சந்தையின் நேர்மையையும் பாதிக்கிறது என்பதாலேயே செபி தற்போது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
Front-Running முதலீட்டாளர்களை எப்படிப் பாதிக்கிறது..?:
Front-Running முறை வர்த்தகம் ரீடைல் முதலீட்டாளர்களைப் பல வழிகளில் பாதிக்கிறது. இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பெருமளவிலான பங்குகளை வாங்கத் திட்டமிட்டிருப்பதாக இடைத்தரகருக்குத் தெரிந்தால், இந்த Front-Runner-கள் முதலில் அந்த பங்குகளை வாங்கிக் குவிப்பார். இதனால், தேவை அதிகரித்து பங்குகளின் விலை உயரும். பின்னர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பங்குகளை வாங்கும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் லாபம் பாதிக்கப்படும்.
இதேபோலத் தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தான் வைத்திருக்கும் பங்குகளை விற்கும் போதும் (Sell Orders) இதே போன்ற பாதிப்பு ஏற்படலாம். தற்போது இந்த Front-Runner ஒரு மியூச்சவல் பண்ட் நிறுவனமாக இருக்கும் போது மக்களின் முதலீட்டுப் பணம் பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல் மியூச்சவல் பண்ட் நிறுவனம் Front-Runner ஆகச் செயல்படும் போது தனது சொந்த முதலீட்டையும் பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க முடியும். ஆனால் இது சக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களையும், மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்களையும் பாதிக்கும்.
Front-Runner மூலம் லாபத்தை ஈட்டுவது சட்டவிரோதமான குற்றம் மட்டும் அல்லாமல் தண்டனைக்குரியது. இதில் ஈடுபடும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அபராதம், தடை உத்தரவு போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
மேலும், இதனால் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டு, முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறும் நிகழ்வும் நடக்கும். இது நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் பாதிக்கும்.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?



Click it and Unblock the Notifications