குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், முதலீட்டாளர்களின் பணத்தை வைத்து ஃப்ரென்ட் ரன்னிங் மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் செபி இந்நிறுவனத்திற்கு தொடர்பான பல்வேறு இடத்தில் சோதனை செய்யப்பட்டு தற்போது இந்நிறுவன மூத்த அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனம் நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் NAV (Net Asset Value) மதிப்புகள் திங்களன்று குறைந்துள்ளது மூலம் இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்தி மியூச்சவல் பண்ட் சந்தையில் பிரபலமான சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது இந்த குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்மால் கேப் பண்டுகள் வியப்பளிக்கும் வகையில் லாபத்தைக் கொடுத்தது மூலம் பல முதலீட்டாளர்கள் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன திட்டங்களைத் தேடித் தேடி முதலீடு செய்ய துவங்கினர்.
இந்த நிலையில் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மோசடி நடவடிக்கை இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டும் அல்லாமல் அச்சத்தில் பலர் விற்பனை செய்யத் துவங்கினர். இதன் விளைவாகப் பல திட்டங்களின் NAV மதிப்பு பல்லை காட்டி வருகிறது.
உதாரணமாக, குவாண்ட் PSU ஃபண்ட் திட்டத்தின் NAV மதிப்பு 1.09% வரை குறைந்துள்ளது. இதேபோல் பிரபலமான ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களின் NAV மதிப்புகள் முறையே 0.66% மற்றும் 0.94% வரை குறைந்துள்ளன.
மே 2024 நிலவரப்படி, குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் திட்டங்களில், இரண்டு திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10,000 கோடிக்கு மேல் உள்ளது. குறிப்பாக, குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் குவாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் ஆகிய திட்டங்கள். திங்கட்கிழமை வர்த்தக நிறைவின் போது, குவாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் திட்டத்தின் NAV மதிப்பு 0.69% குறைந்துள்ளது.
இதேபோல் இந்த மாதம் 21 ஆம் தேதி நிலவரத்துடன் 24 ஆம் தேதி வர்த்தக முடிவில் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன திட்டங்களின் NAV மதிப்பு வைத்துக் கணக்கிட்ட போது, அனைத்து திட்டத்தின் மதிப்பும் சரிந்துள்ளது.
Quant PSU Fund - 1.09 சதவீத சரிவு,
Quant Mid Cap Fund - 0.94 சதவீத சரிவு,
Quant Commodities Fund - 0.88 சதவீத சரிவு,
Quant Value Fund - 0.83 சதவீத சரிவு,
Quant Active Fund - 0.69 சதவீத சரிவு,
Quant Small Cap Fund - 0.66 சதவீத சரிவு,
Quant BFSI Fund - 0.64 சதவீத சரிவு,
Quant Large & Mid Cap Fund - 0.63 சதவீத சரிவு,
Quant Business Cycle Fund - 0.58 சதவீத சரிவு,
Quant Flexi Cap Fund - 0.58 சதவீத சரிவு,
குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் மும்பை தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அதன் சொந்தமான இடங்களில் இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்நிறுவனம் ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு முறைகளைக் கையாண்டதாகத் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
முதலீட்டுச் சந்தையில் இன்சைடர் டிரேடிங் முறை பலருக்கும் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட இதேபோலத் தான் இந்த ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு முறையும். ஒரு ப்ரோகரேஜ் நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி பெரும் பங்கு பரிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டு, அதன் முதலீட்டாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், அவர்களை விட முன்னதாகவே பங்குகளை வாங்கி வைத்து லாபம் ஈட்டுவது தான் ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு (Front-Running) முறை.
2017 ஆம் ஆண்டில் செபி அனுமதியுடன் நிறுவப்பட்ட குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு, இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி அளவிலான சொத்துகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது ரூ.90,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications