சென்னை: இந்திய மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் மும்பை தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அதன் சொந்தமான இடங்களில் இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
இது, முதலீட்டாளர்களிடையே பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கு மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுவது குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் சந்தேகத்திற்குரிய ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு முறைகளைக் கையாண்டதாகத் தெரிகிறது.

முதலீட்டுச் சந்தையில் இன்சைடர் டிரேடிங் முறை பலருக்கும் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட இதேபோலத் தான் இந்த ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு முறையும். ஒரு ப்ரோகரேஜ் நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி பெரும் பங்கு பரிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டு, அதன் முதலீட்டாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், அவர்களை விட முன்னதாகவே பங்குகளை வாங்கி வைத்து லாபம் ஈட்டுவது தான் ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு (Front-Running) முறை.
ஒரு தனிநபர் செய்தால் அது இன்சைடர் டிரேடிங், அதுவே ஒரு ப்ரோகரேஜ் நிறுவனம் செய்தால் அது ஃப்ரென்ட் ரன்னிங். இத்தகையை ஃப்ரென்ட் ரன்னிங் முதலீட்டு முறையைக் கையாண்டதாக குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், செபியின் அதிகாரிகள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் சோதனை நடத்தப்பட்ட இடம், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் பங்கு வர்த்தகர்கள் மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய நபர்களிடமும் செபி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று விசாரணை செய்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் மூலம் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்த பின்னரே, குற்றச்சாட்டுகள் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடியும். இருப்பினும், இந்த சோதனை நடவடிக்கை குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை பெரும் கேள்விக்குள்ளாக்குகிறது.
2017 ஆம் ஆண்டில் செபி அனுமதியுடன் நிறுவப்பட்ட குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டு, இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி அளவிலான சொத்துகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது ரூ.90,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் அதாவது சிறிய நிறுவனங்களின் பங்குகளின் போர்ட்போலியோ-வை உருவாக்கி அதில் பெரும் முதலீட்டை ஈர்த்து வருகிறது. இந்த திட்டம் தற்போது ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டைக் கையாள்கிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் முதலீட்டு சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட ஸ்மால் கேப் ஃபண்டு திட்டமாக இது விளங்குகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரி ஸ்மால் கேப் ஃபண்டு திட்டம் 31% வருமானம் தந்த நிலையில், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் 45 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. இதேபோல் ஒரு வருட காலத்தில் சராசரி ஸ்மால் கேப் ஃபண்டு திட்டம் 55% வருமானம் தந்த நிலையில், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் 69 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications