சென்னை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேலைக்கு ஏற்றவாறு முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு, அதன் வருங்கால ஊழியர்களிடம் தேவைப்படும் திறன் என்ன.. என்பது குறித்த அறிக்கையை Quess Corp நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மேலும் அதற்கு ஏற்றார் போல் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று பல பட்டதாரிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது இணையதளங்களில் 'Skill Set' என்று ஆங்கிலத்தில் சொல்ல படக்கூடிய திறன்களை அதிகரிக்கவும், IT பட்டதாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் AI வளர்ச்சியின் காரணமாக, தங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட பட்டதாரிகளை மட்டுமே, வேலைக்காக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. அதன்படி முக்கிய IT நிறுவனங்களில், அதிக டிமாண்ட் கொண்ட வேலைகளுக்குத் தேவைப்படும் திறன்கள் குறித்த அறிக்கையை Quess Corp நிறுவனம் "Annual Digital Skills Report FY24" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறிப்பிட்ட திறன் கொண்ட வேலைகளும், அதற்கான டிமாண்டின் சதவீதமும் கொடுக்கப்பட்டுள்ளது.
டெவெலப்மென்ட் 66 சதவீதமும், ERP என்பதற்கு 12 சதவீதம், டெஸ்டிங் 7 சதவீதமும், டிசைன் மற்றும் இன்ஜினியரிங் சார்ந்த திறன் கொண்டவர்களுக்கு 7 சதவீதம் மற்றும் நெட்வொர்க்கிங்-கிற்கு 5 சதவீதமும் டிமாண்ட் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இனிமேல் IT நிறுவனங்களில் பணிபுரிய வரும் திறன் கொண்ட பணியாளர்களுக்கான வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல் கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி மற்றும் டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கும் குறிப்பிடத்தக்க தேவை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவு தற்போது அதிகரித்து வருவதால் கிளவுட் இன்ஜினியர்ஸ், செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் போன்ற பிரிவுகளுக்கான ஆட்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல நெட்வொர்க்கில் இருக்கும் பாதிப்புகள் குறித்து அடையாளம் காணவும், பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தித் திறம்பட நிர்வகிக்கவும், நெட்வொர்க்கிங் சார்ந்த பணியாளர்களுக்கும் அதிக தேவை உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
டேட்டா அனாலிடிக்ஸ் பிரிவும், சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் டேட்டா அனாலிஸ்ட், டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் பிசினஸ் இன்டெலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பிரிவுகளில் வேலை செய்வதற்கு திறன் கொண்ட நபர்களின் தேவை அதிகரித்துள்ளது.
தொழில்நுட்ப வேலைகளுக்கு அப்பால், பல்வேறு பிற துறைகளுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் நிதி சார்ந்த துறைகளுக்கு 19 சதவீதமும், ஆட்டோமோட்டிவ் துறைகளுக்கு 15 சதவீதமும், கன்சல்டிங் துறைகளுக்கு 9 சதவீதமும் மற்றும் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் துறைக்கு 6 சதவீதமும் தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது கார்கள் மற்றும் விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்கள், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகம் மாற்றம் அடைந்து வருகிறது. எப்படியெல்லாம் புதிய தயாரிப்புகளை சிறந்த வழியில் உருவாக்குவது என்பதைப் பற்றி இந்நிறுவனங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும், அதிக திறன் கொண்ட நபர்களின் தேவைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications