பான் என்பது இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாகும். குறிப்பாக நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு பான் இன்றியமையாதது. வங்கி கணக்கு திறப்பது முதல் கடனுக்கு விண்ணப்பிப்பது வரை அனைத்திற்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் பான் நுமேபேரை நினைவு வைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் பான் கார்டு இல்லாமல் வெளியில் செல்லும்போது உங்கள் பான் நம்பரை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும்: உங்களிடம் பான் கார்டு கைவசம் இருந்தால், அந்த கார்டில் உள்ள 10 இலக்க பான் நம்பர், உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், சிக்னேச்சர் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து நீங்கள் பான் நம்பரை எடுத்துக் கொள்ளலாம்.

வருமான வரித்துறையின் போர்ட்டல் வழியாக பான் விவரங்களைச் சரிபார்த்தல்: உங்கள் பான் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்க, கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் "Registered User" என்பதைப் பயன்படுத்தி உள்நுழையவும். புதிய பயனர்கள் "Register Yourself" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: பதிவு படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP ஐச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய விவரங்களை வழங்கி உள்நுழைந்து அதன் பிறகு ப்ரொபைல் செட்டிங்ஸில் உள்ள "My Account" என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பான் எண், பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட உங்கள் பான் கார்டு விவரங்கள் காட்டப்படும்.
கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கவும்: உங்கள் பான் கார்டு நும்பரைத் தெரிந்துகொள்ள, பின்வரும் கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
NSDL உதவி எண்: 1800 222 990
வருமான வரித் துறை உதவி எண்: 1800 180 1961
இந்த எண்கள் காலப்போக்கில் மாறக்கூடும் என்பதால் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சரிபார்க்கவும்.
பான் தகவலுக்கான மின்னஞ்சல்: உங்கள் பான் விவரங்களைக் கோர UTIITSL ([email protected]) அல்லது NSDL ([email protected]) இன் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மெயில் எழுதவும். உங்கள் மின்னஞ்சலில் தேவையான அடையாள விவரங்களைச் சேர்ப்பதை உறுதிசெய்யவும். இது போன்ற பல்வேறு ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களுடைய பான் நம்பரை தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications