Zepto, Blinkit போன்ற ஆன்லைன் விரைவு வர்த்தக நிறுவனங்களின் வரவு மற்றும் வளர்ச்சியால், நம் வீடுகளின் அருகில் உள்ள அண்ணாச்சி கடை போன்ற சிறு கடைகள் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன. செல்போனில் ஆன்லைன் விரைவு வர்த்தக நிறுவனங்களை பார்வையிட்டு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால், அடுத்த சில நிமிடங்களில் வீட்டு வாசலுக்கே பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதால் மக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
மேலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, தேர்வு செய்ய ஏராளமான விருப்பங்கள் மற்றும் சில நிமிடங்களில் டெலிவரி கிடைக்கும் என்ற வசதிகள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்ப்பது மிகமிக கடினம் என்றாகி விட்டது. ஆன்லைன் விரைவு வர்த்தக தளங்களின் பூம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான சிறு கடைகள் மூடப்பட்டன.

சிறு கடைகளின் லாப வரம்பு 5 முதல் 10 சதவீதம்தான். அதனால் அவர்களால் பெரிய அளவில் தள்ளுபடி வழங்க முடியாது. ஆனால் ஆன்லைன் விரைவு வர்த்தக நிறுவனங்களிடம் சலுகைகள் என்ற பெரிய ஆயுதம் உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் செய்வது மக்களின் இயல்பாக மாறுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அதற்காக இப்போது பணத்தை அந்த நிறுவனங்கள் தயராக உள்ளன. வெளிநாட்டு துணிகர மூலதனம் பணம் கிடைப்பதால் அவர்கள் இந்த சலுகைகளை வழங்க முடியும்.
இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப ரீதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல பிராண்ட் விற்பனை நிறுவனங்களில் 51 சதவீதம் வரை பங்கு மூலதனம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், சரக்குகளை நேரடியாகவோ அல்லது சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அனுமதி கிடையாது போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆன்லைன் விரைவு டெலிவரி வர்த்தக நிறுவனங்கள், டெலிவரி பகுதிகள் முழுவதும் சிறிய கிடங்குகளை (வேர்ஹவுஸ்) அமைக்கின்றன. சிஏஐடி தகவல்களின்படி, வெளிநாட்டு பணத்தில் 2 முதல் 5 சதவீதம் மட்டுமே உண்மையான உள்கட்டமைப்புக்கு ஆன்லைன் விரைவு டெலிவரி வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. எஞ்சியவை, இழப்புகளை ஈடுசெய்யவும், அதிக தள்ளுபடிகளை வழங்கவும், செயல்பாடுகளுக்கு நிதி அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆன்லைன் விரைவு டெலிவரி வர்த்தகம், சிறு கடைகளை அழித்து விடுமா என்றால் அதற்கு சாத்தியமில்லை. கடைகளை மூடும் பெரும்பாலான சிறுகடைகள் பெருநகரங்களில் உள்ளன. சிறிய நகரங்களில் அருகில் உள்ள கடைகள் மீது மக்களிடம் ஆழமான விசுவாசம் உள்ளது. விரைவு வர்த்தக நிறுவனங்கள் சிறு கடைகளை வெளியேற்றுவதற்கு பதிலாக அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். ஃபிளிப்கார்ட் மினிடஸ் ஏற்கனவே செய்து வருகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications