சென்னை: இந்தியாவில் ஒருபுறம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு தேவையான மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சூழல் உண்டாகிவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இலட்சக்கணக்கான சிறு வணிகர்களை பெருமளவில் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விநியோகஸ்தர்கள் சங்கமான, அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (All India Consumer Products Distributors Federation) சிறு வணிகர்களின் நிலை குறித்து கவலைக்குரிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் சுமார் 13 மில்லியன் பல சரக்கு கடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடைகள் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தான் செயல்படுகின்றன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பல சரக்கு கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கூட பல சரக்கு கடைகளில் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் தேசிய தலைவர் தரியாசில் பாட்டில் அளித்துள்ள பேட்டியில் குயிக்காமர்ஸ் தளங்கள் தான் இந்தியாவில் பலசரக்கு கடைகளை அழித்து வருவதாக கூறியுள்ளார். பலசரக்கு கடைகளுக்கு இருந்த வாடிக்கையாளர்களும் பல சரக்கு கடைகளின் லாபமும் குறைந்ததற்கு குயிக்காமர்ஸ் நிறுவனங்களே காரணம் எனக் கூறியுள்ளார்.
அதிக தள்ளுபடி வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பல சரக்கு விற்பனை என்பது தற்போது சமநிலை இல்லாத ஒரு தளமாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார் . இதன் காரணமாக சிறிய அளவில் பல சரக்கு கடைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களுடைய கடைகளை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இந்தியாவில் 2 லட்சம் பலசரக்கு கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
அண்மைக்காலமாக இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் வாயிலாக பல சரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது மற்றொரு அறிக்கை.
தங்களுடைய பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் பண்டிகை காலத்தில் ஆன்லைன் தளங்கள் வழியாக தங்களின் பொருட்கள் விற்பனை 250 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்களாம்.
ஆனால் கடைகளுக்கு வந்து நேரடியாக பொருட்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்க பாதியாகிவிட்டதாம். குயிக்காமர்ஸ் தளங்கள் வழங்கும் தள்ளுபடிகளுக்கு நிகராக சலுகைகளை வழங்க முடியாமல் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக பெருநகரங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் குயிக்காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியால் 90 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளனவாம். சிறு வணிகர்களை காப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications