இந்தியாவில் சூறாவளியாக வந்த குவிக் காமர்ஸ் தளங்கள் முதலில் மக்களுக்கு எப்போதும் கிடைக்காத வேகத்தில் குறைந்த விலையில் சேவையை அளித்து வந்தது. ஆனால் இப்போது இந்த சேவை மக்களின் பணத்தை கரைக்கும் விஷயமாக மாறி வருகிறது. நாட்டின் பிரபலமாக விளங்கும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் மற்றும் ஜெப்டோ ஆகியவை குவிக் காமர்ஸ் துறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.
இந்த தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய சவாலை எதிர்கொள்கின்றனர். குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் ஆரம்பத்தில் அதிகப்படியான தள்ளுபடி, மலிவு விலையில் பொருட்கள் என வாடிக்கையாளர்களை சேர்த்தது. ஆனால் இப்போது போட்டி ஒருப்பக்கம், அதிகப்படியான நஷ்டம் ஒருப்பக்கம், புதிய முதலீடுகளை திரட்ட முடியாமல் தவிக்கும் நிர்வாகம் ஒருப்பக்கம் என மாட்டிக்கொண்டு உள்ளது.

இதனால் குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே விதிக்கும் கட்டணங்களை தாண்டி, மறைமுகமாக கூடுதல் கட்டணங்கள் சேர்த்து மொத்த பொருட்கள் மற்றும் சேவையின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. உதாரணமாக ஹேண்டலிங் கட்டணம், மழைக் கட்டணம், சிறிய ஆர்டர் கட்டணம் மற்றும் உச்சநேர கட்டணம் போன்றவை ஒவ்வொரு சிறிய ஆர்டருக்கும் 50 முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணங்களாக சேர்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் இந்த குவிக் காமர்ஸ் தளங்கள் தங்களின் வேகமான விநியோகம் மற்றும் குறைந்த விலை காரணமாக மளிகை கடைகளை விட வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இதனால் மக்கள் மளிகை கடைகளை விட்டு குவிக் காமர்ஸ் தளத்தில் அதிகப்படியான பொருட்களை வாங்க துவங்கினர். இதன் எதிரொலியாக பெரு நகரங்களில் பல மளிகை கடைகள் மூடப்பட்டதும் கடந்த 5 வருடத்தில் நம்மால் கவனிக்க முடிந்தது.
ஆனால், தற்போது இந்த தளங்களில் சேர்க்கப்படும் பலவிதமான கட்டணங்கள் மளிகை கடைகளை காட்டிலும் அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
உதாரணமாக ஸ்விகி இன்ஸ்டாமார்ட் 10 முதல் 15 ரூபாய் வரையிலான ஹேண்டலிங் கட்டணத்தையும், ஜெப்டோ சிறிய ஆர்டர்களுக்கு 13 ரூபாய் மற்றும் பெரிய ஆர்டர்களுக்கு 21 ரூபாய் கட்டணத்தையும் வசூலிக்கிறது. இதேபோல் பிளிங்கிட் 11 ரூபாய் ஹேண்டலிங் கட்டணத்தை வசூலிக்கிறது, மேலும் மழைக் கட்டணம் (15 ரூபாய்) மற்றும் உச்சநேர கட்டணம் (30 ரூபாய்) போன்றவை ஆர்டர்கள் அதிகரிக்கும்போது அல்லது மோசமான வானிலையின் போது கட்டணங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த கட்டணங்களுக்கு மேல் ஜிஎஸ்டி மற்றும் விநியோக கட்டணமும் சேர்க்கப்படுவதால், வாடிக்கையாளர்களின் மொத்த செலவு கணிசமாக உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது, இதனால் மக்கள் மீண்டும் மளிகை கடைகளை நாடி செல்ல துவங்கியுள்ளனர்.
இந்த கூடுதல் கட்டணங்கள், வாடிக்கையாளர்களின் ஆர்டர் செய்யும் பழக்கத்தை மாற்றியுள்ளன. முன்பு அடிக்கடி ஆர்டர் செய்து வந்த மக்கள் இப்போது இந்த கட்டணங்களைத் தவிர்க்க ஒரே ஆர்டரில் பல பொருட்களை இணைத்து ஆர்டர் செய்கின்றனர் அல்லது தவிர்கின்றனர்.
இந்த மாற்றம் குவிக் காமர்ஸ் தளங்களின் மொத்த ஆர்டர் மதிப்பை (GOV) குறைக்கலாம் மற்றும் அவற்றின் டார்க் ஸ்டோர்களின் (dark stores) செயல்பாட்டு செலவை அதிகரிக்கலாம். இதேபோல் இந்த அதீத கட்டணம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகளவில் பாதிக்கும். ஏற்கனவே பெரும்பாலான நிறுவனங்கள் இப்பிரிவில் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில், இந்த வர்த்தக சரிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறையில் ஏற்கனவே டன்சோ என்ற நிறுவனம் திவாலான நிலையில், அடுத்தக்கட்ட வீழ்ச்சியின் ஆரம்பமாக இந்த கட்டண பிரச்சனை பார்க்கப்படுகிறது. உதாரணமாக, ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ ஆகியவை 200 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும்போது விநியோக கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன, ஆனால் பிளிங்கிட் 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்ய வேண்டும் என்று விதிக்கிறது. இதேபோல் இது ஒவ்வொரு நகரங்களுக்கும் மாறுப்படுகிறது, அதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுப்படுகிறது.
இந்த மாறுபட்ட கட்டண நிபந்தனைகள், வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த கட்டணங்கள் நிலையானவை அல்ல; ஆர்டர் மதிப்பு மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் இன்னும் இலாபத்தில் இயங்கவில்லை என்பதால், இந்த கூடுதல் கட்டணங்கள் அவற்றின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இந்த தளங்களின் முதன்மையான வாடிக்கையாளர்களான சிறிய மற்றும் அவசர ஆர்டர்களை வைப்பவர்களுக்கு இந்த கட்டணங்கள் நியாயமற்றதாக உணரப்படுகின்றன.
ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் மற்றும் ஜெப்டோ போன்றவை தங்கள் கட்டண கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் தற்போது உருவாகியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications