இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் காமர்ஸ் துறையில், நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில் யார் முதலில் அதிக சந்தை பிடிக்கப்போவது என்பதில் பெரும் போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில் போட்டியைச் சமாளிக்கவும், நிறுவனத்தின் சேவை மற்றும் கட்டமைப்பை உயர்தரத்தில் உருவாக்கக் குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் தலைமைப் பதவிகளுக்கான திறமையான ஊழியர்களை ஈர்ப்பதில் குழாயடி சண்டையிட்டு வருகிறது.
குவிக் காமர்ஸ் துறையில் இருக்கும் நிறுவனங்கள் சக போட்டி நிறுவனங்களில் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உட்கார வைக்க ரூ. 2-3 கோடி வரையிலான சம்பளம் மற்றும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் வழங்கத் தயாராகியுள்ளது. இதோடு இந்த சம்பளத்தில் பல அதிகாரிகளைச் சேர்த்துள்ளது என்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகின்றன.

தற்போதைய ஸ்டார்ட்அப் சந்தையில் குவிக் காமர்ஸ் துறை நிறுவனங்கள் தான் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்த சில துறைகளில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய அளவிலான நிதி ஆதாரத்துடன் உள்ளது, இதனால் அதிகப்படியான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களைப் பெறுவதில் மிகவும் வேகமாகச் செயல்பட்டு வருகிறது.
இதனால் தனது வர்த்தக வளர்ச்சிக்குச் சரியான திறமையான ஊழியர்கள் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு 3 கோடி ரூபாய் வரையில் சம்பளம் கொடுக்க தயாராக உள்ளது எக்ஸ்கியூடிவ் சர்ச் நிறுவனமான Fidius Advisory-ன் நிர்வாக பங்குதாரர் அனுஜ் ராய் கூறினார்.
குவிக் காமர்ஸ் துறையில் குவிந்த அதிகப்படியான முதலீட்டின் காரணமாக திடீரென்று, ஏராளமான வேலைவாய்ப்புகள் திறந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு ஈகாமர்ஸ் துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு புதிய வேலை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
உலகளவில் குவிக் காமர்ஸ் போன்ற மாடலில் இயங்கிய வர்த்தகங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதற்கு மத்தியில், தற்போது இந்தியாவின் குவிக் காமர்ஸ் வெற்றிக் கதையாக உள்ளது. ஸ்டிரேடஜி ஆலோசனை நிறுவனமான ரெட்சீர், இந்தியாவில் குவிக் காமர்ஸ் தொழிலின் மொத்த சரக்கு மதிப்பு (GMV) அடுத்த மூன்று ஆண்டுகளில் 40-45% சிஏஜிஆர் (CAGR) என்ற விகிதத்தில் வளரும் என்று கணித்துள்ளது.
இதனிடைய Blinkit, Swiggy Instamart மற்றும் Zepto ஆகியவை இத்துறையில் ஆதிக்கம் செலுத்தினாலும், களத்தில் புதிதாக லஃளிப்கார்ட்-ன் குவிக் காமர்ஸ் சேவை Minutes, பெங்களூருக்குப் பிறகு குர்கானில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டாடா குழுமத்தின் BigBasket முழுமையான குவிக் காமர்ஸ் சேவை மாடலுக்கு மாறும் பணியில் உள்ளது, அதேசமயம் அமேசான் அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது குவிக் காமர்ஸ் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இதனால் போட்டி அதிகரித்து வரும் காரணத்தால் Zepto, Swiggy Instamart மற்றும் Flipkart ஆகியவை இத்துறையில் திறன்வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக சக போட்டி நிறுவனங்களிடம் இருந்து ஊழியர்களை ஈர்த்து வருகிறது. இதில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பெங்களூர், கூர்கான் பகுதியில் உள்ளது.


Click it and Unblock the Notifications