முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்களுடைய பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் நிலையில் சில துறைகளில் மட்டும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ், இ-காமர்ஸ், FMCG மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள் இந்தப் பண்டிகை காலத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது குவிக் காமர்ஸ் தளங்களில் அதிக அளவு ஆர்டர்கள் செய்யப்பட்டன.
அதிக மக்கள் வரத்தை சமாளிக்கும் பொருட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. இதனால் 25 முதல் 30 சதவீதம் வரை பணியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால முடிவடைந்த பிறகும் விரைவு வர்த்தகத் தளங்களின் வளர்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மார்ச் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் டார்க் ஸ்டோர்களை இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளன. குறிப்பாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் மக்களின் வரத்தை சமாளிக்க பணியாளர்களை 60% வரை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன என்று டீம் லீஸ் ஸ்டாப்பிங் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
இகாமர்ஸ் விற்பனை 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேவை பண்டிகைக்காலத்தின் போது அதிகரித்தது. ஆனால் பண்டிகை காலத்திற்கு பிறகு தேவை சற்று குறைந்து வருவதால் 10% பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றன.
FMCG துறை இந்த பண்டிகை காலத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்த விற்பனையை எதிர்பார்த்தது. ஆனால் பண்டிகை காலத்திற்குப் பிறகு வெறும் மிதமான விற்பனையை மட்டுமே பெற்றது. விற்பனையின் வேகம் குறைந்தாலும் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை 5 முதல் 10 சதவீதமாக FMCG நிறுவனங்கள் உயர்த்தியது.
அதோடு ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற பிரீமியம் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவையும் பண்டிகை காலத்தில் அதிகரித்தன. இதனால் சேல்ஸ் லார்ஜஸ்டிக் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற ரோல்களுக்கான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் பண்டிகை காலம் முடிந்து தற்போது தேவை சற்று குறைந்து வருவதால் இனிவரும் நாட்களில் தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications