வாட்ஸ்அப், "ஃபேவரைட்ஸ் ஃபில்டர்" (Favorites Filter) எனப்படும் ஒரு அற்புதமான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் தாங்கள் அதிகம் தொடர்பு கொண்ட காண்டாக்ட்-கள் மற்றும் குரூப்-களை விரைவாக கண்டுபிடிக்க உதவும். இது உங்கள் அன்பானவர்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும். வாட்ஸ்அப்பில் இந்தப் புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
"ஃபேவரைட்ஸ் ஃபில்டர்" என்றால் என்ன?: "ஃபேவரைட்ஸ் ஃபில்டர்" என்பது, நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்களையும் குழுக்களையும் ஒரு பட்டியலாக உருவாக்க உதவும் வாட்ஸ்அப்பின் புதிய அம்சமாகும். இந்த ஃபில்டர் உங்கள் சாட்-இன் முன் வரிசையில் இந்தத் தொடர்புகளை வைத்திருக்கும்.

குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் அல்லது முக்கிய குரூப்-கள் என அனைவரையும் இந்த புதிய அம்சத்தின் மூலம் வரிசைப்படுத்தி வைத்திருக்க முடியும். இதனால் 500 முதல் 600 காண்டாக்ட் வரை இருக்கும் வாட்ஸ் அப் பயனாளரும் கூட தங்களுக்குத் தேவையான காண்டாக்ட்-களை பட்டியலாக வைத்திருக்க முடியும்.
ஃபேவரைட்ஸ் ஃபில்டர் ஆப்ஷனை எப்படி பயன்படுத்துவது?: இந்த ஆப்ஷன் மூலம் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் காண்டாக்ட்களின் லிஸ்ட்டை உருவாக்க முடியும். வேலை செய்யும் போது நண்பர்களுடன் பேசும்போது, அவர்களின் சாட்களை ஸ்க்ரோல் செய்து கீழே சென்று எடுப்பதற்கு சிரமமாக இருக்கலாம்.
அதற்கு தானே சர்ச் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. எனினும் சிலர் தாங்கள் காண்டாக்ட்களை எப்படி சேவ் செய்து வைத்தனர் என்பது அவ்வப்போது மறந்துவிடக்கூடும். இது போன்ற நேரங்களில் உங்களுக்கு தேவையான சாட்களை மட்டும் ஃபேவரைட் பட்டியலில் சேர்த்து வைப்பதன் மூலம் உங்களால் எளிதில் அவற்றைப் பயன்படுத்த முடியும்.
ஸ்டெப் 1: வாட்ஸ் அப்பை திறந்தவுடன் மேலே "All", "Unread", "Favourites", "Groups" என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் "Favourites" ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 2: "Favourites" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது "Add to Favourites" என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் காண்பிக்கப்படும். அதிலிருந்து உங்களுக்கு தேவையான காண்டாக்ட்களை தேர்வு செய்து, டிக் மார்க்கை கிளிக் செய்தால் ஃபேவரைட்ஸ் லிஸ்டில் அவை பட்டியலாக மாறிவிடும். தேவைப்படும் நேரங்களில் ஃபேவரைட்ஸ் லிஸ்டில் இருந்து உங்களால் விருப்பமான சாட்-களைப் பார்க்க முடியும்.
ஸ்டெப் 3: அதே திரையில் காண்பிக்கப்படும் "Manage your Favourites" என்பதை கிளிக் செய்வதால் உங்களுக்கு தேவையற்ற சாட்களை அவற்றிலிருந்து நீக்க முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications