ரூ.52 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு.. மோமோஸ் கடை திறந்த இளைஞர்! 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி டர்ன் ஓவர்!

ரூ.52 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட யாருக்காவது மனது வருமா? ஆனால் சுய தொழில் விருப்பத்திற்காக ஒரு நபர் இவ்வளவு அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டுள்ளார். இதில் ஆச்சரியதக்க விஷயம் என்னவென்றால் வேலையை விட்ட வெறும் 2 ஆண்டுகளில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்து வருகிறார்.

கார்ப்பரேட் வேலை டூ மோமோஸ் பிசினஸ்: டெல்லி NIFT கல்லூரியில் பட்டம் பெற்றவர் 33 வயதான சாகேத் சௌரப். இவர் தன்னுடைய வாவ் பிளக்ஸ் என்ற ஸ்டார்ட்டப் நிறுவனத்தை பிளிக்ஸ் ஸ்டாக் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். அதிலும் நல்ல வருமானம் கிடைத்தது. அதன் பிறகு 1 வருடம் ஒரு நிறுவனத்தில் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு ஆண்டுக்கு ரூ.52 லட்சம் சம்பளம் கிடைத்தது. இவ்வளவோ அதிக சம்பளம் கிடைத்தாலும் அவருக்கோ உணவுத்துறையில் அலாதி பிரியம்.

ரூ.52 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு.. மோமோஸ் கடை திறந்த இளைஞர்! 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி டர்ன் ஓவர்!

இதனால் செப்டம்பர் 2023-ஆம் ஆண்டில் இவ்வளவு அதிக சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் பணிபுரியும் போதே குரு கிராமில் அவருடைய சகோதரி மற்றும் மைத்துனரின் ஹோட்டலான பேம்பூ கஃபே-க்கு சென்று சின்ன சின்ன உதவிகளை செய்து வந்தார். பேம்பூ கஃபேவில் பரோட்டா முதல் பிரியாணி வரை பல உணவுகள் விற்பனை செய்யப்பட்டாலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மோமோஸ் தான் பிரதான தேர்வாக இருந்தது.

Also Read

எனவே மோமோஸ் தொழில் தொடங்க முடிவு செய்தார். ஆரம்பத்தில் பேம்பூ கஃபே-க்கு வெளியே ஒரு சின்ன கூடாரம் அமைத்து மோமோஸ் விற்பனை செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே குருகிராமின் இன்போடெக் பகுதியில் ஒரு சிறிய தள்ளுவண்டி கடையை தொடங்கினார். அங்கு நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மோமோஸ் விற்பனையானது.

மோமோஸ் மாஃபியாவின் தொடக்கம்: கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் சௌரபிடம் எங்களுக்கும் இதுபோல மோமோஸ் கடை தொடங்கவே விருப்பம் என்று கூறியுள்ளனர். சொன்னவர்களில் பாதி பேர் அலுவலக ஊழியர்கள். எனவே பிரான்சைஸ் கொடுத்து தனது தொழிலை விரிவாக்க திட்டமிட்டார். 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார். தற்போது இந்நிறுவனம் 40 தள்ளுவண்டிகள், 20 சிறிய விற்பனை நிலையங்களுடன் இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் தள்ளுவண்டி போட்டு விற்பனை செய்யும் போது மழை, வெயில் மற்றும் ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இருந்தது. இதனால் ஒரு கடை அமைத்து.. கடைக்கு வெளியே தள்ளுவண்டிகளை அமைத்து கார்ட் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் மோமோஸ் விற்பனை செய்து வந்தார். 2024 ஆம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மோமோஸ் மாஃபியா ரூ.16 லட்சம் வருவாய் ஈட்டியது. 2025-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.2.2 கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் ரூ.3 கோடி வருவாய் ஈட்ட இலக்கு வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+