இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய பெரும்பாலானவர்களிடம் உங்களுக்கு சுய தொழில் செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்டால், நிச்சயம் சுய தொழில் தான் செய்வேன் என்று தான் கூறுவார்கள் .ஏனெனில் சொந்தமாக தொழில் புரிய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவு . ஆனால் நிதி சார்ந்த பொறுப்புகள் அவற்றை நிறைவேற்ற விடுவதில்லை.
ஒரு சிலர் மட்டும்தான் ரிஸ்க் எடுத்து சுய தொழில் செய்ய வேண்டும் என களத்தில் இறங்கி அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர், உலகின் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பார்த்து வந்த வேலையை விடுத்து ஃபல்லூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சுய தொழிலில் இறங்கினார். அப்பொழுது அவரைப் பார்த்து சிரித்த மக்கள் இப்போது அவரின் வெற்றியை கண்டு வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

பிரதீப் கண்ணன் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் . இவர் ஒராக்கிள் நிறுவனத்தில் பெங்களூரு அலுவலகத்தில் உயர் பதவியில் வேலை செய்து வந்தவர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வேலையை விட்ட இவர் ஃபல்லூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சுய தொழிலில் இறங்கினார். நான் பெங்களூரில் ஒராக்கிஸ் நிறுவனத்தின் ஆப்ரேஷன் ஹெட்டாக வேலை செய்து வந்தேன், நல்ல சம்பளம், அழகான குடும்பம் பெர்பெக்ட்டான 9 -5 வேலை , லைஃப் செட்டிலாகிவிட்டது என அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் திடீரென நான் அந்த வேலையை விட்டேன் அப்போது அனைவருமே என்னை பார்த்து சிரித்தனர், இவ்வளவு நல்ல வேலையை யாராவது விடுவார்களா என பலரும் என்னிடம் கேள்வி எழுப்பினர் . சுய தொழில் புரிய போகிறேன் சொந்தமாக ஒரு ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கப் போகிறேன் என அவர் கூறிய போது பலரும் இந்த ஐடியாவை விட்டுவிடு மீண்டும் வேலைக்கே செல் இது போன்ற ஒரு வேலையும் சம்பளமும் அனைவருக்கும் கிடைத்துவிடாது உனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை விட்டு விடாதே என அறிவுரை கூறினார்களாம்.
ஆனால் பிரதீப்புக்கு என்னதான் இந்த வேலையில் தனக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் , அதில் மன திருப்தி ஏற்படாததாகவே உணர்ந்தாராம். எனவே 2019 ஆம் ஆண்டில் தன்னுடைய வேலை விட்டு அவர் பெங்களூரில் இருந்து மீண்டும் கரூருக்கே திரும்பினார். அங்கே ஃபல்லூடா ஐஸ்கிரீம் தொடர்பான தன்னுடைய ஸ்டார்ட் அப்பை தொடங்கினார் . தி ஃபல்லூடா ஷாப் என்ற பெயரில் முதல் கடையை நிறுவினார்.
6 ஆண்டுகளில் தி ஃபல்லூடா ஷாப் இந்தியாவிலும் துபாயிலும் 18க்கும் அதிகமான கடைகளை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு D2C ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகவும் இது மாறி வருகிறது. பிரதீப் கண்ணன் இதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 6 ஆண்டுகளில் நான் ஒரு நல்ல ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கி இருக்கிறேன் என கூறும் சிறுநகரங்களில் இருந்து பெரிய கனவுகளை கட்டமைக்க முடியும் என நீங்கள் நம்பினால் என்னை ஃபாலோ செய்யுங்கள் இது வெறும் தொடக்கம் தான் என அவர் கூறியிருக்கிறார் .
அவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளை பெற்று இருக்கிறது .பலரும் இந்த ஐஸ்கிரீமை ருசித்து பார்த்து இருக்கிறோம் மிகச் சிறப்பாக இருக்கிறது என பதில் பதிவு செய்திருக்கின்றனர். ஒரு பயனர் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து புதிதாக ஒரு விஷயத்தை செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல ஆனால் அதை நீங்கள் செய்து சாதித்து இருக்கிறீர்கள் உங்களின் வெற்றியை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருக்கிறார். ஒரு பயனர் நிறைய பேர் வேலையை விட்டு இந்த மாதிரி சுயதொழில் செய்ய வருகிறார்கள். ஆனால் சிலரால் மட்டுமே வெற்றி பெற முடிகிறது நீங்கள் அதில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications