இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை அவர் இன்றுடன் முடித்து கொண்டார். இவர் தனது ஒட்டுமொத்த சர்வதேச கிரிகெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அத்துடன் அதிக பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வரும் சம்பளம் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்களில் சம்பாதிக்கிறார்.
இவருடைய ஒட்டுமொத்த ஆண்டு சம்பளம் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டில் இவருடைய நிகர மதிப்பு ரூ.132 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், 2023-2024 சீசனுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேட் வீரராக உள்ளார்.

மைந்த்ரா, பாம்பே ஷேவிங் கம்பெனி, மன்னா ஃபுட்ஸ், அரிஸ்டோக்ராட் பேக்ஸ், ஓப்போ, மூவ், ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் ஜூம்கார், கோகோ ஸ்டுடியோ தமிழ், மற்றும் ட்ரீம்11 உட்பட அஸ்வின் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் ஒரு சில பிராண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், 2021ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் அஸ்வினுக்கு அவரது அணியால் ரூ.5 கோடி வழங்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸால் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் 2025 இல் அஷ்வினை ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்தது.
இந்த நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரின் சிஎஸ்கேவில் அஸ்வின் தனது நீண்ட கால சக வீரரான ரவீந்திர ஜடேஜாவுடன் கூட்டு சேரவுள்ளார். கணக்கீடுகளின்படி ஐபிஎல் சீசன்களில் அஸ்வின் சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றிற்காக விளையாடி, 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஒப்பந்தங்களில் இருந்து சுமார் ரூ.97.5 கோடிகளை பெற்றுள்ளார்.
அந்த வகையில், 2008 முதல் 2025 வரை அவர் பெற்றுள்ள ஐபிஎல் சம்பளம்: 2008ஆம் ஆண்டில் சென்னை அணியில் இடம்பெற்ற அஸ்வின் அப்போது ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கினார். அதேபோல், அதே அணியில் 2009-2010 வரை அதே சம்பளத்தை பெற்றார். தொடர்ந்து 2011-2013 வரை சென்னை அணிக்காக விளையாட ரூ.3.91 கோடி சம்பளம் பெற்றார். 2014-2015 ஆண்டுகளில் சென்னை அணிக்கு விளையாடி ரூ.7.50 கோடிகளை சம்பாதித்தார்.
தொடர்ந்து 2016-2017-ல் சென்னை அணி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், புனே அணிக்காக, அதே ரூ.7.50 கோடி சம்பளம் வாங்கினார். அதை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அஸ்வினை எடுத்தது. அதன்படி கடந்த 2018-2019 வரை அவர் ரூ.7.60 கோடிகளை சம்பளமாக வாங்கினார். 2020-2021-ல் டெல்லி கேபிட்டல் அணிக்காக விளையாட அதே ரூ.7.60 கோடி சம்பளம் வாங்கினார். தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகாக 2022-2024 வரை ரூ.5 கோடி சம்பளம் பெற்றார். இறுதியாக வரும் 2025 சீசனுக்காக சென்னை அணிக்காக எடுக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.9.75 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆகவே மொத்தம் அவர் பெற்ற ஐபிஎல் சீசனுக்கான சம்பளம் ரூ.97,24,00,000 ஆகும்.
கடந்த 2017 சீசனில் காயம் காரணமாக RPSG அணியில் விளையாடவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக, 212 ஆட்டங்களில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ரொக்கம் நிறைந்த லீக்கில் வீரர் தனது சாதனைகளின் மூலம் மிகப்பெரிய தொகையைப் பெற்றுள்ளார். சிறப்பான பந்துவீச்சில் 7.12 எகானமி ரேட்டில் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications