தாத்தா, அப்பா என குடும்பத்தினர் சேர்த்து வைத்த சொத்து இல்லாமல் தாமாக படித்து முன்னேறி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே இங்கு வெற்றியாளர்கள் தான். எல்லோருடைய வாழ்வுமே எளிதாக இருப்பதில்லை. சிலர் தோல்விகளை சந்தித்து துவண்டு போகாமல் உயிர் வாழ்வதற்காக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். சிலர் இப்படியே நம் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது. அதை நல்ல முறையில் மாற்றியாக வேண்டும் என்பதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி தன் தடையை உடைத்து வளர்ச்சி அடைந்த ஒரு மனிதரைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் நிறுவனத்தின் தலைவரான ஆர்.ஜி சந்திரமோகன் சென்னையைச் சேர்ந்தவர். தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி தள்ளுவண்டி கடையில் ஐஸ்கிரீம் விற்று தனது தொழிலை தொடங்கினார். அவருடைய தோழில் ஒரு எளிமையான தொடக்கமாக இருந்தாலும், இன்று இந்தியாவில் மிகப்பெரிய தனியார் பால் நிறுவனத்திற்கு உரிமையாளராக மாறி இருக்கிறார் சந்திரமோகன்.

தான் கல்லூரியில் படிக்கும்போது சந்திரமோகன் கணிதத் தேர்வில் தோல்வியுற்றார். அப்போதிலிருந்து தான் அவருடைய வாழ்க்கை பாதை வேறு திசையில் செல்ல தொடங்கியது. தன்னுடைய 21-ஆம் வயதில் ஒரு முக்கிய முடிவு எடுத்தார். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்தார். ஆனால் அப்போது இந்த முடிவு அவருக்கு சவாலான ஒன்றாக இருந்துள்ளது. கல்லூரியை விட்டு வீட்டிலிருந்த சந்திரமோகன் மரக்கிடங்கு ஒன்றில் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது சந்திரமோகனுக்கு சம்பளமாக 65 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. அவரது தந்தை ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வந்தார்.
1970-ஆம் ஆண்டில் ஐஸ்கிரீம் துறையில் நுழைய வேண்டும் என்பதற்காக மரக்கிடங்கில் வேலை செய்த பணியை விட்டார். குடும்பத்தின் உதவியுடன் ரூ.13,000-த்தை திரட்டி தனது புதிய முயற்சிக்கு முதலீடு செய்தார். மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் சந்திரமோகன் தனது தொழிலைத் தொடங்கினார். 250 சதுர அடி இடத்தில் 15 தள்ளுவண்டிகளை பயன்படுத்தி ஐஸ்கிரீமை பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஆரம்பகட்டத்தில் சந்திரமோகனின் வணிகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இருப்பினும் இந்த தடைகளில் உடைந்து போகாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார். இதனால் முதல் ஆண்டில் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் வந்தது. இந்த வருமானம் அவருக்கு நம்பிக்கையை வழங்கியது. இதனால் 1981-ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் சிறு நகரங்களில் ஐஸ்கிரீம் கிடைப்பதில்லை என்பதை கவனித்து, அங்கு தனது தொழிலை விரிவுப்படுத்த தொடங்கினார்.
பெரிய பிராண்டுகள் இன்னும் சிறு கிராமங்களுக்கு வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சந்திரமோகன் "அருண் ஐஸ்கிரீம்" பிராண்டை நிறுவினார். அது விரைவில் தமிழ்நாட்டில் ஐஸ்கிரீம் துறையில் மாபெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. 1986-ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தை ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் என்று மறுபெயரிட்டார். காலப்போக்கில் அருண் ஐஸ்கிரீம்கள், ஆரோக்கிய பால், ஹட்சன் தயிர், ஹட்சன் பனீர், ஹட்சன் நெய், ஹட்சன் டெய்ரி ஒயிட்னர் மற்றும் ஐபாகோ இந்தியா மட்டுமின்றி உலக அளவில் 42 நாடுகளில் பிரபலமானது. இந்த தயாரிப்புகள் உள்நாட்டு சந்தை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மக்களுக்குப் பிடித்த பிராண்டாக மாறியது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் நிறுவனமாக இருக்கும் ஹட்சன் 4,00,000 விவசாயிகளின் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. சுமார் 10,000 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஹட்சன் நிறுவனத்திற்கு பால் வழங்கி வருகின்றனர். தற்போது இந்த நிறுவனம் 234.16 பில்லியன் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.23,413 கோடி. அன்று தைரியமாக தள்ளுவண்டி கடையை தொடங்கிய சந்திரமுகன் இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு ஓனராகியுள்ளார். எந்தவித முயற்சியையும் கையில் எடுக்காமல் யோசித்துக் கொண்டே இருக்கும் இளைஞர்களுக்கு இவர் மிகப்பெரிய முன்னுதாரணம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications