”பணம் ஈஸியா கிடைக்காதுப்பா..” – மகனுக்கு நடிகர் மாதவன் சொன்ன அறிவுரை வைரல்..!!

மின்னலே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாதவன். தன் புன்னகையாலும், அழகாலும் திறமையான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் மாதவனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மாதவன் அண்மை காலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ஜி.டி.நாயுடு குறித்த வாழ்க்கை வரலாற்று படம் வெளியாகியுள்ளது. மாதவனை பொறுத்தவரை நடிப்பு மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னுடைய செயல்பாடுகளால் முன் உதாரணமாக திகழ்கிறார். அந்த வகையில் பணத்தை எப்படி கையாள வேண்டும் என தனது மகன் வேதாந்த்திற்கு அவர் கூறிய அறிவுரை தொடர்பான பேட்டி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

”பணம் ஈஸியா கிடைக்காதுப்பா..” – மகனுக்கு நடிகர் மாதவன் சொன்ன அறிவுரை வைரல்..!!

வசதி வாய்ப்புகள் நிறைந்த சூழலில் வளர்ந்தாலும், தனது மகன் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மாதவன் கையாண்ட சில எளிய அணுகுமுறைகளை பாட்காஸ்ட் ஒன்றில் பகிர்ந்துள்ளார். தான் மிடில் கிளாஸ் பின்னணியில் வளர்ந்தவன் என்பதால் வேதாந்த் பணத்தையும் வசதியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் மாதவன் உறுதியாக இருந்தாராம்.

Also Read

பணத்திற்கு பின்னாள் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை உணர்த்த வேதாந்திற்கு பரிசாக கிடைக்கும் விலை உயர்ந்த பொம்மைகளின் விலையை, வீட்டில் வேலை செய்யும் சமையல்காரரின் ஓராண்டு வருமானத்தோடு ஒப்பிட்டு அறிவிரை வழங்குவாராம். உனக்கு பரிசாகக் கிடைத்த இந்த பொம்மையின் விலை என்னவென்று தெரியுமா? இதே போல ஒன்றை வாங்க, இந்த நபர் ஒரு வருடம் முழுமையாக உழைக்க வேண்டும் என கூறினாராம். இது வேதாந்தின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அவர் பணத்தை பார்க்கும் விதம் மாற தொடங்கியது என மாதவன் கூறியுள்ளார்.

அதே போல பாதுகாவலர்கள், ஓட்டுநர்கள், வீட்டு பணியாளர்களுக்கு மரியாதை தர வேண்டும் என சிறு வயதில் இருந்தே கற்று தந்ததாகவும், தனது மகன் வெளியில் உள்ளவர்களிடம் மரியாதையாக பழகும்போது, மற்றவர்கள் வந்து அதை தன்னிடம் பாராட்டும் தருணங்கள், தான் ஒரு சிறந்த தந்தையாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் என மாதவன் கூறியுள்ளார்.

Recommended For You

தற்போது வேதாந்த் ஒரு நீச்சல் வீரராக சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே அவரது இலக்கு என சொல்லப்படுகிறது. அந்த வகையில் மாதவனின் வளர்ப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பணம் எளிமையாக கிடைக்கிறது என்பதற்காக அதனை எளிமையாக எடுத்து கொள்ள கூடாது என பணத்தின் அருமை சொல்லி வளர்த்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+