ராதாகிஷன் தமானி. கொரோனா வந்த பிறகு தான் இவர் பெயர் அதிகம் பத்திரிகைகளில் அடி படத் தொடங்கியது.
கடந்த மார்ச் 2019-ல் 11.1 பில்லியன் டாலராக இருந்த ராதாகிஷன் தமானி & அவரத் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 17 ஜூன் 2020 ஃபோர்ப்ஸ் கணக்குப் படி 16.3 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம்.
இந்த கொரோனா காலத்திலும், பல பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்ததால், ராதாகிஷன் தமானி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டி மார்ட்
இவர் அவென்யூ சூப்பர் மார்ட் என்கிற கம்பெனியின் நிறுவனர். இந்தியாவின் பல பெரு நகரங்களில் டி மார்ட் என்கிற சூபப்ர் மார்க்கெட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம் அல்லது பொருட்களைக் கூட வாங்கி இருப்போம். அந்த கடைகள் அவென்யூ சூப்பர் மார்ட்டின் கடைகள் தான். ராதாகிஷன் தமானி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவரும் கூட.
இந்தியா சிமெண்ட்ஸ்
இப்போது, ராதாகிஷன் தமானி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு, கணிசமான பங்குகளை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து அவென்யூ சூப்பர்மார்ட் தரப்பு எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. இந்தியா சிமெண்ட்ஸ் தரப்பிலும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
ஸ்ரீனிவாசன்
இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனியில் 29 % பங்குகளை, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் தான் வைத்திருக்கிறார். இவர் தான் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் என்பதும் குறிப்பிடத்தகக்து. இந்த டீல் தொடர்பாக ராதாகிஷன் தமானி, ஸ்ரீனிவாசனிடம் பேசி இருப்பதாக லைவ் மிண்ட் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள்
ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினர்கள், கடந்த சில மாதங்களாகவே, இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனியின் பங்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்களாம். மார்ச் 2020 மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் தரவுகள் படியே, ராதாகிஷன் தமானி, கோபிகிஷன் தமானி, ராதாகிஷன் & கோபி கிஷன் தமானி என மொத்தம் சுமாராக 20 % பங்குகளை வைத்திருக்கிறார்களாம்.
உற்பத்தி ஆலைகள்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு, தமிழகம், ஆந்திரப் பிரதேசம் உட்பட மொத்தம் 10 ஆலைகள் இந்தியாவில் இருப்பதாக, அவர்களின் வலைதளம் சொல்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் டீல் நல்ல படியாக முடிந்தால், ராதாகிஷன் தமானியின் வியாபாரத்தை இன்னும் பன்முகத்தன்மை கொண்டதாக மாறும் என்கிறார்கள்.
பெரிய டீல்
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, நிர்மா சோப் பவுடர் கம்பெனி, இமாமி குழுமத்தின் சிமெண்ட் வியாபாரத்தை 5,500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தகக்து. இந்தியா சிமெண்ட்ஸ் டீல் எப்போது நடக்கும், இந்த டீல் முடிந்தால் பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளின் விலை என்ன ஆகும்? இந்த டீலுக்கு ஸ்ரீனிவாசன் சம்மதிப்பாரா என பல கேள்விகள் நம் ஆர்வத்தை தூண்டுகின்றன. எல்லாவற்றுக்கும் காத்திருப்பது மட்டுமே விடை. காத்திருப்போம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications