இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமான டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட், மும்பையில் மட்டும் சுமார் 17 வணிக இடங்கள் அதாவது கமர்சியல் ஸ்பேஸ்-ஐ சுமார் 88.74 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஸ்டாக் அணுகிய ஆவணங்கள் காட்டுகின்றன.
பலருக்கும் தெரிந்திருக்கும் டிமார்ட் கடைகளில் பிற ரீடைல் கடைகளை காட்டிலும் பொருட்களை குறைவான விலையில் விற்க முக்கிய காரணம் அதனுடைய பெரும்பாலான கடைகள் சொந்த கட்டிடம் என்பதால் ரியல் எஸ்டேட் செலவுகள் மிகவும் குறைவாகும்.

இந்த பார்மூலா எந்தொரு நிறுவனமும் கடைப்பிடிப்பது இல்லை என்பாதல் வாடிக்கையாளர் கூட்டம் டிமார்ட்டில் அலைமோதுகிறது. இந்த நிலையில் தற்போது மும்பையில் வாங்கிய 17 வணிக இடங்களின் மொத்த பரப்பளவு 45,876.92 சதுர அடி.
மும்பையின் கண்டிவலி மேற்கில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் மூன்று இடங்கள், தரை தளத்தில் மூன்று, முதல் தளத்தில் மூன்று மற்றும் இரண்டாவது தளத்தில் எட்டு அலகுகள் இடங்கள் என மொத்தமாக வாங்கியுள்ளது.
இந்த விற்பனை ஒப்பந்தம் ஆகஸ்ட் 24, 2023 அன்று பதிவு செய்யப்பட்டது. விற்பனையாளர் கவுரி லேண்ட் டெவலப்பர்ஸ் ஆகும். இந்த வர்த்தக பகுதியில் சுமார் 44 கார் பார்க்கிங் இடங்களுடன் வருகின்றன.
2021 ஆம் ஆண்டில், ராதாகிஷன் தமானியின் கட்டுப்பாட்டில் உள்ள அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு சொத்துக்களை மும்பையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 11 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள டிமார்ட் பிராண்ட் இதற்கு முன்பு மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications