மும்பையின் புறநகர் பகுதியில் தன் சில்லறை வணிகத்தை ஆரம்பித்த ஒருவர், இன்று முன்னணி ரிலையன்ஸ் ரீடெயில், ஃப்யூச்¬சர் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அடுத்த நிறுவனமாக இருப்பது அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனத்தை சேர்ந்த டிமார்ட் செயின் ஹைப்பர் மார்க்கெட் தான்.
இவரின் பெரும்பாலான கிளைகள் உயர் வீதிகளிலோ மால்களிலோ இவரது டிமார்ட் நிறுவனம் இருப்பதைக் காண்பது அரிது.
மேலும் பெரும்பாலும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நடுத்தர வர்க்க குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் இவரது கடைகள் இருக்கும். அதுவும் கடை இருக்கும் இடமும் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் அளவுக்கு தேர்ந்தெடுப்பாராம். வாடகை கட்டடத்தில் இருப்பதைவிட சொந்தக் கட்டடத்திலேயே நிறுவனம் இருப்பதை விரும்புபவர் என்றும் கூறப்படுகிறது.
இது தான் லாபத்துக்கு காரணம்
இதற்கு காரணம் நீண்ட காலத்துக்கு இது மிகவும் லாபத்தைத் தரக்கூடிய ஒரு முக்கியமான யுக்தி தான். இதன் காரணமாகத் தான் மற்ற மார்ட்களை விட டி-மார்ட்டில் பொருள்களின் விலையும் சற்று குறைவாகக் கிடைக்கும். இதனால் இவரின் நிறுவனத்துக்கென்று தனி கஸ்டமர்களும் உள்ளனர். அவர்களால் இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது என்றால் அது மிகையல்ல.
லாபம் ஈட்டும் நிறுவனம்
கடும் பொருளாதார சூழ்நிலையில் மற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட, தமனியின் துரித தனிப்பட்ட செயல்பாடுகளால் டிமார்ட் மட்டும் லாபம் ஈட்டி வந்தது. ஏனெனில் சாதாரண வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கியதால் என்னவோ பங்குச்சந்தையிலும் ஈ-காமர்ஸ் துறையிலும் நுழைய எண்ணமில்லாமல் துவக்கத்தில் தமனி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பங்கு சந்தையில் நுழைவு
ஆனால் காலப்போக்கில் கட்டாயம் ஏற்பட Avenue Supermarts 2017-ல் பங்குச்சந்தையில் கால் பதித்தது. அப்போது பங்குச்சந்தை குறித்து தெளிவாக தெரிந்து கொண்டு அங்கும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார் தமனி. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றிக் கனியை சுவைத்து வருகிறார். அதிலும் உலகமே இருண்டு கொண்டிருக்கும் நிலையில் இவரின் காட்டில் மட்டும் பண மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நிகர மதிப்பு உயர்வு
இது எந்த அளவு வெற்றி எனில் தற்போது உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், உலகம் முழுக்க பங்கு சந்தைகள் அரண்டு போய் கிடைக்கின்றன. இந்த ரணகளத்திலும் லாபம் கண்ட ஒரே இந்திய அதிபர் ராதாகிஷன் தமனி. இந்த ஆண்டு அவருடைய அவென்யூ சூப்பர்மார்டின் நிகர மதிப்பு 5% உயர்ந்து 10.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இவர் மட்டும் தான் லாபம்
கொரோனா பரவி வரும் இந்த நிலையில், பல பில்லியனர்களும் பல கோடிகளை இழந்து வருகின்றனர். அதிலும் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டால் கண்காணிக்கப்படும் 12 பணக்காரர்களிடையே, லாபம் கண்ட தனி நபராக தமனி உள்ளார். இவரின் முக்கிய வர்த்தகமான அவென்யூ மார்டின் பங்குகள் இந்த ஆண்டு 18% அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இவர்கள் கூட நஷ்டம் தான்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவரின் பில்லியனர் நண்பர்களான முகேஷ் அம்பானி மற்றும் உதய் கோட்டக் உள்ளிட்டோர் கூட நஷ்டம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சரி இப்படி பல பில்லியனர்களும் சரிந்த நிலையிலும் கூட இவர் காட்டில் மழை பொழிகிறதே என்ன காரணம்.
லாபத்துக்கு என்ன காரணம்
இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத எந்த விதமான விருப்பமில்லாத தயாரிப்புகளை அதிகம் வழங்குவதில்லையாம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், அதோடு விளம்பர செலவுகளை முற்றிலும் குறைப்பதன் மூலமும், அதன் பிரதிபலனை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதன் மூலமும் தான் இன்றளவிலும் தனியாக தனித்து நிற்கிறார் தமனி.
வாய்ப்புகள் பிரகாசம் தான்
மேலும் இந்தியாவில் வேகமாக நுகரும் பொருட்களின் வினியோக சங்கிலி பாதிக்கப்படாத வரை அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் வாய்ப்புகள் பிரகாசமாகத் தான் இருக்கும். ஆக இவர் காட்டில் எப்போதும் மழை தான். டிசம்பர் 2019 நிலவரப்படி,11 மாநிலங்களில் இவருக்கு 72 நகரங்களில் 196 கிளைகள் உள்ளன. இந்த நிலையில் அவென்யூ சூப்பார்மார்டின் பங்கு விலையானது 2405 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications