யானைக்கும் அடி சறுக்கும்! பங்குச்சந்தையில் ரூ.83.000 கோடியை இழந்த 10 பெரிய கைகள்..!

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 5 மாதங்களாக நிகழ்ந்த தொடர்ச்சியான மோசமான விற்பனையால், சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் பெரிய இழப்பை சந்தித்தனர்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் நாட்டின் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என கருதப்படும் ராதாகிஷன் தமனி, ஜூன்ஜூன்வாலா குடும்பம் உள்ளிட்ட நபர்களும் பங்குச் சந்தையின் இந்த சாட்டை அடியிலிருந்து தப்பவில்லை. பெரிய முதலீட்டாளர்களை பொறுத்தவரை அவர்களது போர்ட்போலியாவில் சிறு நிறுவன பங்குகளின் விலையில் ஏற்பட்ட பெரிய சரிவால்தான் அவர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.

யானைக்கும் அடி சறுக்கும்! பங்குச்சந்தையில் ரூ.83.000 கோடியை இழந்த 10 பெரிய கைகள்..!

கடந்த அக்டோபர் 1 முதல் இதுவரையிலான காலத்தில் டாப் 10 பெரிய முதலீட்டாளர்களின் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.81,000 கோடி குறைந்துள்ளது. குறிப்பாக டிமார்ட் நிறுவனரும். பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனியின் கைவசமுள்ள பங்குகளின் மதிப்பு 28 சதவீதம் அல்லது ரூ.64,000 கோடி குறைந்து ரூ.1.67 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் இறுதியில் ரூ.2.31 லட்சம் கோடியாக இருந்தது.

2024 அக்டோபர் 1 முதல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் குடும்ப பங்குகளின் மதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளது. இந்த குடும்பத்தின் மொத்த போர்ட்போலியாவின் மதிப்பு சுமார் ரூ.59,709 கோடியாக இருந்தது. இதில், அண்மையில் பட்டியலிடப்பட்ட இன்வென்டுரஸ் நாலெட்ஜ் சொல்யூன்ஸ் நிறுவன பங்குகள் சேர்க்கப்படவில்லை.

கடந்த அக்டோபர் 1 முதல் ஆகாஷ் பன்ஷாலியின் போர்ட்போலியாவின் மதிப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது. இவர் முதலீடு செய்த குஜராத் ப்ளோரோகெமிக்கல்ஸ் பங்குகளின் விலை 13 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் ஆகாஷின் இரண்டாவது பெரிய முதலீடான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) இந்த காலகட்டத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், தொழிலதிபருமான ஹேமேந்திர கோத்தாரியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பு 29 சதவீதம் குறைந்துள்ளது. அக்டோபர் 1 முதல் இவரது இரண்டு முக்கிய பங்குகளான அல்கைல் அமைன்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் சொனாட்டா சாப்ட்வேர் ஆகியவை முறையே 28 மற்றும் 33 சதவீதம் வீழ்ச்சி கண்டன.

முகுல் அகர்வால், ஆஷிஷ் கச்சோலியா மற்றும் யூசஃபாலி காதர் போன்ற சில முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் சூறாவளியை சமாளித்து கொண்டு, தங்கள் இழப்புகளை ஒற்றை இலக்கித்திற்குள் கட்டுப்படுத்திக் கொண்டனர். பரம் கேப்பிடலின் முகுல் அகர்வாலின் போர்ட்போலியா மதிப்பு 6 சதவீதம் மட்டுமே குறைந்தது. இந்த காலத்தில் பிஎஸ்இ பங்குகள் 40 சதவீதம் அதிகரித்ததே முகுல் அகர்வாலின் இழப்பு கட்டுக்குள் இருப்பதற்கு முக்கிய காரணம்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+